நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜய் கலகலப்பான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
தெலுங்கு இயக்குநர் வம்சி படத்தில் அடுத்து நடிக்க உள்ளார் விஜய். இதற்கு தமன் இசையமைக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்க உள்ளார். இந்தப் படத்தில் தனது குடும்பத்தார் மீது மட்டுமல்லாமல், அனைவரிடமும் அதிகமாக அன்பு பாராட்டுவாராம் விஜய்.
இந்த அன்பே ஒரு கட்டத்தில் அவருக்கு பிரச்சினையாக மாறுகிறது. அதனால் என்னென்ன விளைவுகளை அவர் எதிர்கொள்கிறார் என்பதும் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதும்தான் கதை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். படம் முழுவதும் விஜய்யின் நகைச்சுவை அதிகம் இருக்குமாம்.

