'இன்னொரு நாயகனின் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது'

2 mins read
c3d287aa-182e-44b9-a67a-4a0de279e42c
நடிகர்கள் சூரி (இடது), சூர்யா. -

'ஜெய் பீம்' படம் குறித்து நடி­கர் சூரி சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார். அதை பல­ரும் பகிர்ந்து வந்த நிலை­யில், சூரி­யின் அந்­தப் பதி­வுக்கு சூர்யா அளித்­துள்ள பதில் சுவா­ர­சி­ய­மாக உள்­ளது.

இதை­ய­டுத்து, சூர்­யா­வின் பதி­லை­யும் ஏரா­ள­மா­னோர் சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.

ஒரு நாள் இரவு வேளை­யில் 'ஜெய் பீம்' படத்­தைப் பார்ப்­பது என முடிவு செய்­தா­ராம் சூரி. தூங்­கு­வ­தற்கு முன்பு சிறிது நேரம் பார்த்து­விட்டு, மீத­முள்ள படத்தை மறு­நாள் பார்க்­க­லாம் என்­ப­து­தான் அவ­ரது திட்­ட­மாக இருந்­துள்­ளது.

"இப்­படி நினைத்­து­தான் படம் பார்க்­கத் தொடங்­கி­னேன். ஆனால், படம் முடிந்த பிற­கும்­கூட அமர்ந்­தி­ருந்த இடத்­தில் இருந்து என்­னால் எழுந்­தி­ருக்க முடி­ய­வில்லை. அப்­ப­டியே உறைந்து போனேன். 'ஜெய் பீம்' படம் அல்ல, பாடம். இந்­தப் படத்­துக்கு விருது கிடைத்­தால், அது விரு­துக்­குப் பெருமை," என்று பதி­விட்­டி­ருந்­தார் சூரி.

அவ­ரது இந்­தப் பதிவை ஏரா­ள­மான ரசி­கர்­கள் பாராட்டி இருந்தனர். இந்­நி­லை­யில், சூரிக்குப் பதில் அளித்­துள்­ளார் சூர்யா.

"இன்­னொரு நாய­க­னி­டமிருந்து வாழ்த்து பெறு­வது மகிழ்ச்சி அளிக்­கிறது," என்று சூர்யா தனது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

நகைச்­சுவை நடி­க­ரா­கப் பெய­ரெ­டுத்த சூரி, தற்­போது வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'விடு­தலை' என்ற படத்­தில் கதா­நா­ய­க­னாக நடித்து வரு­கி­றார். இதை மறை­மு­க­மாக குறிப்­பிட்டே அவரை 'இன்­னொரு நாய­கன்' என்று தமது பதி­லில் பதிவு செய்­துள்­ளார் சூர்யா.

இதற்கிடையே, 'ஜெய் பீம்' விவகாரம் தொடர்பாக அதன் இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் என்ற வகையில் ஜோதிகா ஆகிய மூவர் மீது பாமக போலிசில் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.