இளையராஜா தோன்றும் விளம்பரம் ஒன்று அமெரிக்காவின் 'டைம்ஸ்' சதுக்கத்தில் உள்ள மின்னிலக்க விளம்பரப் பலகையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டைம்ஸ் சதுக்கத்துக்கு தினமும் முந்நூறாயிரம் பேர் வந்து போகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
அப்பகுதியில் நிறைய வணிக வளாகங்கள், அலுவலகங்கள் அமைந்துள்ளன. அதனால் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அதே சமயம் இதற்கு பெருந்தொகை செலவாகும்.
இந்நிலையில், இளையராஜா தோன்றும் விளம்பரம் டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது.