சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

1 mins read
655b0e0e-1296-48a7-a20e-83eb394a323b
-

சூர்யா தற்­பொ­ழுது பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில் 'எதற்­கும் துணிந்­த­வன்' படத்­தில் நடித்து முடித்­தி­ருக்­கி­றார்.

இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணி­கள் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கின்­றன. இந்­நி­லை­யில் இந்தப் படத்­தில் நடி­கர் சிவ­கார்த்­தி­கே­ய­ன் ஒரு பாடல் எழுதியுள்ளார் என்பதை படக்குழு அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­து

உள்­ளது.

ஏற்­கெ­னவே 'கோல­மாவு கோகிலா', 'கனா', 'டாக்­டர்' போன்ற படங்­க­ளுக்­காக சிவ­கார்த்­தி­கே­யன் எழு­திய பாடல்­கள்

பட்­டி­தொட்டி எங்­கும் பல­ரா­லும் விரும்பி

கேட்­கப்­பட்டு வருகின்றன. அத­னால் இந்தப் படத்திலும் அவர் எழு­தி­யுள்ள பாடல் மீதான எதிர்­பார்ப்பு இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையும் அதி­க­ரித்­துள்­ளது.