ராஜமௌலி இயக்கியிருக்கும்
'ஆர்ஆர்ஆர்' படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2022 ஜனவரி 7ஆம் தேதி பல மொழிகளில் வெளியாகிறது.
இதற்கிடையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பாலிவுட் படம் 'கங்குபாய் காட்யவாடி'. 1960களில் மும்பையின் சிவப்பு விளக்குப்
பகுதியில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை அடிப்
படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம். இதில் ஆலியா பட், கங்குபாயாக நடித்துள்ளார்.
இந்தப் படம் திரை அரங்குகளில் ஜனவரி 6ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதனால் இந்தப் படத்திற்குப் பிறகு வெளியாகும் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் ராஜமௌலி சஞ்சய் லீலா பன்சாலியிடம் பேசி 'கங்குபாய் காட்யவாடி' படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி படத்தைத் தள்ளி வைத்திருக்கிறார் இயக்குநர்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும்
'ஆர்ஆர்ஆர்' 'பாகுபலி' வசூலை முறியடிக்குமா என்ற கேள்வியுடன் காத்திருக்கிறது திரையுலகம்.