இத்தனை நாட்களாக மௌனம் சாதித்த 'ஜெய் பீம்' படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் "இந்தப் படத்தில் சில
சர்ச்சையான விஷயங்களுக்கு சூர்யா காரணம் இல்லை. நான் மட்டுமே காரணம். அதனால் அவரிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்," என்று அறிவித்துள்ளார்.
1990களில் ராஜ்கண்ணு,
வீர்பலிங்கம் போன்ற பழங்குடியின மக்களின் இறப்பு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்த்த சில பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இன்றளவும் பழங்குடியினர் அனுபவிக்கும் துயரம் ஆகியவற்றை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டவும் அவர்களின் வலிகளைப் பிரதிபலிக்கும் நோக்கிலும்தான் நான் இந்தப் படத்தை எடுத்தேன்.
இத்தகைய ஏழை, எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு
எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினரும் பல மனித உரிமை அமைப்புகளும் இணைந்து பல்வேறு போராட்டங்களை நாள்தோறும் நடத்தி வருகின்றன.
அதுமட்டுமல்லாது நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார். இதன்மூலம் காவல்துறையும் நீதித்துறையும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதை உணர்த்தும் நோக்கிலேயே இந்தப் படத்தை உருவாக்கினோம்.
மேலும் தமிழக முதல்வர் 'ஜெய் பீம்' படத்தைப் பார்த்து பாராட்டியதோடு தினமும் துன்பப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு பலரிடமிருந்து வரவேற்பு கிடைத்தது எனக்கு
மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் அந்த காலண்டர் விவகாரம் இப்படி ஒரு
பூகம்பத்தைக் கிளப்பும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
1995 காலகட்டத்தை பிரதிபலிப்
பதற்காகவே நான் அந்தக் காலண்டரை வைத்தேன். ஒரு சமூகத்தை
குறிப்பதுபோல் நான் அதைப் பயன்
படுத்தவில்லை.
சில வினாடிகள் மட்டுமே இடம்
பெறும் அந்தக் காட்சியை நாங்கள் இறுதிக்கட்டப் பணிகளின்போதுகூட கவனிக்கவில்லை. மேலும் அமேசான் பிரைமில் வெளியிடுவதற்கு முன்னர் பெரிய திரையில் இப்படத்தைத் திரையிட்டு பல்வேறு தரப்பினருக்கும்
காட்டினோம். அவர்களும் அதுகுறித்து ஒன்றும் கூறவில்லை.
மேலும் படம் வெளியான மறுநாள் காலண்டர் விவகாரம் குறித்து நான் சமூக வலைத்தளத்தில் தெரிந்து கொண்டேன். உடனே அந்தக்
காட்சியை நீக்கினேன். இந்த தவறுக்கு இயக்குநராகிய நான்தான் பொறுப்பேற்க வேண்டும். அதனால் சூர்யாவை
பொறுப்பேற்கச் சொல்வது எந்த
விதத்திலும் நியாயம் ஆகாது.
இத்திரைப்படத்தில் சூர்யா நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பழங்குடியினர் படும் துயரங்களைப் பிரதிபலிப்பது
ஒன்றையே நோக்கமாக கொண்டிருந்தார். என்னால் அவருக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு நான் அவரிடம்
மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தால் வேதனை அடைந்த வர்களிடமும் நான் மன்னிப்பைத் தெரிவித்துகொள்கிறேன். மேலும் இப்பேற்பட்ட இந்த நெருக்கடியில் எங்களுக்கு ஆதரவு தந்த மக்கள், திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோருக்கு இந்த இக்கட்டான நேரத்தில் நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
பூதாகரமாகக் கிளம்பும் 'ஜெய் பீம்' படப் பிரச்சினை - மன்னிப்புக் கேட்ட இயக்குநர்
'ஜெய் பீம்' படத்தில் வழக்கறிஞராக நடித்த சூர்யா, செங்கேணியாக நடித்த லிஜிமோல் ஜோஸ், அவரின் மகளாக நடித்த சிறுமி ஜோசிகா மாயா.