இயக்குநர் ம.மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் 'கடைசி விவசாயி'. 'காக்கா முட்டை' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கவனம் பெற்றவர் மணிகண்டன். அந்தப் படத்தைத் தொடர்ந்து 'ஆண்டவன் கட்டளை',
'குற்றமே தண்டனை' உள்ளிட்ட
படங்களை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேது
பதியுடன் 'ஆண்டவன் கட்டளை' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் முன்னணி நாயகனாக
நல்லாண்டி எனும் முதியவர் நடித்துள்ளார். நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தொடக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்த நிலையில் சில காரணங்
களால் அவர் பாதியில் விலகிக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில், "நான் பார்த்த படங்களிலேயே 'கடைசி விவசாயி' மிகச்சிறந்த படங்களில் ஒன்று. மகத்தான இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்," என்று பதிவிட்டுள்ளார். படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

