தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விக்ரம்-கௌதம் மேனன் இடையே மீண்டும் மோதல்

2 mins read
14604063-5a5a-4aa0-9309-3ffd4df93a3b
-

முதன்­மு­றை­யாக சியான் விக்­ரமை வைத்து இயக்­கு­நர் கௌதம் மேனன் 'துருவ

நட்­சத்­தி­ரம்' என்ற படத்தை இயக்கி, நடித்திருந்தார்.

பிரம்­மாண்­ட­மாக தயா­ரிக்­கப்­படும்

இந்­தப் படத்­தில், விக்­ரம் உள­வுத்­துறை அதி­கா­ரி­யாக நடித்­துள்­ளார். 'துருவ'

நட்­சத்­தி­ரம் படத்­தின் பெரும்­பா­லான

காட்­சி­கள், துருக்கி, ஜார்­ஜியா உள்­ளிட்ட வெளி­நா­டு­களில் 2018ஆம் ஆண்டே எடுத்து முடிக்­கப்­பட்­டன. பொரு­ளா­தா­ரப் பிரச்­சினை கார­ண­மாக எஞ்­சி­யுள்ள காட்­சி­களை முடிக்க முடி­யா­மல் போனது.

அத­னால் நடி­கர் விக்­ரம் 'கோப்ரா', 'பொன்­னி­யின் செல்­வன்', 'மகான்' என அடுத்­த­டுத்து பல்­வேறு படங்­களில் நடிக்­கத் தொடங்­கி­ய­தால் 'துருவ நட்­சத்­தி­ரம்' படத்­தின் படப்­பி­டிப்பு நின்று போனது.

கடந்த 3 ஆண்­டு­க­ளாக முடங்­கிக் கிடக்­கும் இப்­

ப­டத்­தின் படப்­பி­டிப்பை முடித்­துக் கொடுக்க நடி­கர்

விக்­ரம் அண்­மை­யில் 15 நாட்­கள் ஒதுக்கி இருந்­தார்.­

ஆனால் இயக்­கு­நர் கௌதம் மேனன் படப்­பி­டிப்­பைத் தொடங்­கா­மல்

விக்­ரமை முதலில் குரல் பதிவு செய்­யச் சொன்­ன­தால், தற்­போது இரு­வ­ருக்­கும் இடையே மீண்­டும் கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் 'துருவ நட்­சத்­தி­ரம்' படத்தை மீண்­டும் தொடங்கு­

வ­தில் சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளது.

இந்­தப்­ ப­டத்­தில், ரித்து வர்மா, ஐஸ்­வர்யா ராஜேஷ் என இரண்டு நாய­கி­கள் நடித்­துள்­ள­னர். அவர்­க­ளு­டன் சிம்­ரன், ராதிகா, டிடி மற்­றும் பார்த்­தி­பன் உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், 'துருவ நட்­சத்­தி­ரம்' படத்­தின் தாம­தம் தொடர்­பாக சில மாதங்­க­ளுக்கு முன்பு பேட்­டி­யொன்­றில் கூறிய பார்த்­தி­பன், "நான் சிறு­வ­ய­தில் நடித்த படம்," என்று பேசி­யி­ருந்­தார்.

இது படக்­கு­ழு­வி­னர் மத்­தி­யில்

கவ­லையை ஏற்படுத்தியது. தற்­போது

மீண்­டும் 'துருவ நட்­சத்­தி­ரம்' படத்­தைக் கிண்­டல் செய்­துள்­ளார்.

இது தொடர்­பாக தனது டுவிட்­டர் பதி­வில், "துருவ நட்­சத்­தி­ரம்' படத்­தின் உதவி இயக்­கு­நர் பார்த்­தி­யின் இயக்­கத்­தில் இது! இவர் இயக்­கு­ந­ரா­கும்­போது 'துருவ நட்­சத்­தி­ரம்' வெளி­யாக வாழ்த்­து­கள்," என்று தெரி­வித்­துள்­ளார் பார்த்­தி­பன். மேலும், பார்த்தி இயக்கி­யுள்ள குறும்­ப­டத்­தை­யும் பகிர்ந்­துள்ளார்

இந்த டுவிட்­டால் படக்­

கு­ழு­வி­னர் பெரும்

அதிர்ச்­சி­யில் உள்­ள­னர். ஏனென்­றால், படத்­தின் முக்­கி­யக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துக்கொண்டே, படத்தைக் கிண்டல் செய்வது சரி­யல்ல என்று படக்­கு­ழு­வி­னர் சார்­பில் வருத்தம் தெரி­வித்­த­னர்.