'நடிப்பில் அசத்திய சிவா'

'நடிப்பில் அசத்திய சிவா'

3 mins read
ecbe5acb-7126-446b-ab2d-5025d33b033c
-

சிவ­கார்த்­தி­கே­யன் நடிப்­பில் உரு­வாகி வரு­கிறது 'டான்'. அறி­முக இயக்­கு­நர் சிபி சக்­ர­வர்த்தி இயக்­கு­கி­றார்.

தலைப்­பைக் கேட்­ட­தும் குண்­டர் கும்­ப­லுக்கு இடை­யே­யான மோதல், தெறிக்­கும் துப்­பாக்­கித் தோட்­டாக்­கள், ரத்­தச் சித­றல்­கள் என்­றெல்­லாம் கற்­பனை செய்ய வேண்­டாம். இதற்கு நேர்­மா­றா­கத்­தான் எல்­லாம் இருக்­கு­மாம். அதா­வது, சிவா இதில் 'செல்ல டான்' என்­கி­றார் இயக்­கு­நர்.

"தமி­ழில் எல்­லோ­ரை­யும் கவ­ரக்­கூ­டிய வகை­யில் ஒரு ஜாலி­யான கல்­லூரி கதைக்­களத்­தில் அமைந்த படம் வெளி­வந்து நீண்ட கால­மா­கி­விட்­டது.

"பொது­வாக, கல்­லூ­ரிப் படங்­கள் நம்மை பழைய நினை­வு­க­ளுக்கு மீண்­டும் அழைத்­துச் செல்­லும். அப்­படி எல்­லோ­ருடைய மல­ரும் நினை­வு­க­ளை­தூண்­டி­விடும் வகை­யில் இந்­தப் படம் உரு­வாகி வரு­கிறது.

"பொது­வாக எல்லா கல்­லூ­ரி­க­ளி­லுமே 'அராத்து' என்று சொல்­லக்­கூ­டிய வகை­யில் சிலர் இருப்­பார்­கள். அவர்­க­ளுக்கு என்று ஒரு கூட்­டம் இருக்­கும்.

"எப்­போ­துமே உற்­சா­க­மாக சிரித்­துப் பேசி பிற­ரைக் கிண்­டல் செய்­வது இந்த அராத்துக் கும்­ப­லின் வழக்­க­மாக இருக்­கும். அப்­ப­டிப்­பட்ட ஒரு குழு­வைச் சேர்ந்­த­வர்­தான் நம்ம சிவா.

"கல்­லூரி மாண­வர் கதா­பாத்­தி­ரத்­து­டன் கச்­சி­த­மா­கப் பொருந்தி உள்­ளார். அவர் இப்­படி ஒரு வேடத்­தில் நடிப்­பது இதுவே முதல் முறை. அத­னால் இயல்­பா­கவே அவ­ருக்­குப் பிடித்­துப்­போனது.

"கல்­லூரி மாண­வ­ரா­கத் தொடங்கி, அவ­ரது முப்­ப­தா­வது வயது வரை­யி­லான வாழ்க்­கை­தான் இந்த படத்­தின் கதை," என்­கி­றார் சிபி சக்­ர­வர்த்தி.

'டான்' படத்­தின் தயா­ரிப்­பா­ள­ரும் சிவா­தான். 'டாக்­டர்' படத்­தின் பெரும் வெற்றி கார­ண­மாக அவ­ரது அடுத்­த­டுத்த படங்­க­ளுக்கு மவுசு அதி­க­ரித்­துள்­ளது.

எனவே, 'டான்' பட வியா­பா­ரம் சிவா­வின் திரைப்­ப­ய­ணத்­தில் முக்­கிய மைல்­கல்­லாக அமை­யும் என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள்.

"முந்­தைய படம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்ட பிற­கும் அவர் அமை­தி­யா­கத்­தான் வலம்­வ­ரு­கி­றார். அறி­முக இயக்­கு­நர் என்று சாதா­ர­ண­மாக நினைக்­கா­மல் எனக்­கான அனைத்து வசதி­க­ளை­யும் குறை­வின்­றிச் செய்து கொடுத்­தார். ஒரு தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் முன்­னணி கதா­நா­ய­க­னா­க­வும் இருந்­தும்­கூட, எளி­மை­யாக நடந்­து­கொள்­வது பெரிய விஷ­யம்.

"இந்­தப் படம் சிவா­வின் நடிப்­புக்­கா­க­வும் பேசப்­படும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை. ஒரு குறிப்­பிட்ட காட்­சியை எடுக்க வேண்­டிய நாள் நெருங்­கி­ய­போது, அவ­ரி­டம் அது­கு­றித்து நினை­வூட்­டி­னேன். சற்று நீள­மான அந்­தக் காட்­சியை ஒரே நாளில் பட­மாக்க வேண்­டும் என்­பது என் விருப்­பம். ஆனால், திட்­ட­மிட்­ட­படி எல்­லாம் நடக்­குமா எனும் தயக்­க­மும் பய­மும் இருந்­தது.

"மறு­நாள் அந்­தக் காட்­சி­யைப் பட­மாக்­கும் முன்பு எத்­தனை 'டேக்'கானா­லும் பர­வா­யில்லை சார் என்று மேலோட்­ட­மாக கூறி­வைத்­தேன்.

"ஆனால், அந்­தக் காட்­சியை விவ­ரிக்­கச் சொல்லி கேட்­டுக்­கொண்ட பின்­னர் அரை மணி நேரம் மௌ­ன­மாக இருந்­தார். பிறகு காட்சி பட­மாக்­கப்­பட்டபோது ஒரே 'டேக்'கில் நடித்து முடித்­தார்.

"ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வி­ன­ரும் வியந்­து­போ­னோம். நிச்­ச­ய­மாக இந்த ஒரு காட்சி, அவர் 'மிகச் சிறந்த நடி­கர்' என்­பதை நிரூ­பிக்­கும்," என்­கிறார் இயக்­கு­நர் சிபி சக்­ர­வர்த்தி.

இந்­தப் படத்­தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்­தி­ரக்­கனி, சூரி, முனீஸ்­காந்த், காளி வெங்­கட், ராதா­ரவி, சிங்­கம்­புலி உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

'டாக்­டர்' படத்­தைத் தொடர்ந்து மீண்­டும் சிவா­வு­டன் இணைந்­துள்­ளார் பிரி­யங்கா மோகன்.

"பிரி­யங்கா தமிழ் தெரிந்த நாயகி. தோற்­றம் மட்­டு­மல்ல, அவரது நடிப்­பும் அழ­காக உள்ளது. நிச்சயமாக கோடம்பாக்கத்தில் ஒரு சுற்று வருவார் என நம்பலாம்.

"சிவா­வுக்­கும் அவ­ருக்­கு­மான உடல்­மொழி கச்­சி­த­மாக உள்­ளது. இந்­தப் படம் அனைத்து தரப்பு ரசி­கர்­களுக்­கும் பிடிக்­கும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் இயக்­கு­நர் சிபி சக்­ர­வர்த்தி.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படங்களில் 'டான்' படத்தின் வியாபாரம் புதிய உச்சத்தை தொடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதன் பின்னர் அவரது சம்பளமும் நிச்சயம் அதிகரிக்கும் என்பது இவர்களின் கணிப்பாக உள்ளது.

, :

  