'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் ஷ்ருதி
நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக அவரது மகள் ஷ்ருதிஹாசன் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எனினும் நிகழ்ச்சி தயாரிப்புத் தரப்பு இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கியபோது, திடீரென அவர் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது.
அப்போது அவருக்குப் பதிலாக அவரது மருமகள் சமந்தா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதேபோல் இப்போது கமல் ஹாசனுக்குப் பதிலாக ஷ்ருதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
'நல்ல பெண் இருந்தால் சொல்லுங்க'
நல்ல பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள தயார் என்கிறார் சிம்பு.
ஹைதராபாத்தில் நடைபெற்ற 'மாநாடு' படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், நேரடித் தெலுங்குப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், 'எப்போது திருமணம் செய்து கொள்வீர் கள்?' என்று கேட்க, "நல்ல பெண்ணாக இருந்தால் சொல்லுங்கள். திருமணம் செய்துகொள்கிறேன்," என்றார். தற்போது இவரது நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு', 'கொரோனா குமார்' ஆகிய இரு படங்கள் உருவாகி வருகின்றன.

