சண்டைப் பயிற்சியாளர் இயக்கும் ‘சித்திரைச் செவ்வானம்’

சமுத்­தி­ரக்­கனி நடிப்­பில் உரு­வாகி உள்­ளது 'சித்­தி­ரைச் செவ்­வா­னம்'.

இயக்­கு­நர் ஏ.எல்.விஜய் கதை எழுத, கோடம்­பாக்­கத்­தின் முன்­னணி சண்­டைப் பயிற்­சி­யா­ள­ரான சில்வா, இந்­தப் படத்­தின் மூலம் இயக்­கு­நர் அவ­தா­ரம் எடுத்­துள்­ளார்.

எதிர்­வ­ரும் டிசம்­பர் 3ஆம் தேதி இப்­ப­டம் 'ஓடிடி' தளத்­தில் வெளி­யா­கிறது. சி.எஸ்.சாம் இசை­ய­மைத்­துள்­ளார். பூஜா கண்­ணன், ரீமா கல்­லிங்­கல் என படத்­தில் இரு நாய­கி­கள் உள்­ள­னர். இவர்­களில் பூஜா கண்­ணன் வேறு யாரு­மல்ல, நடிகை சாய் பல்லவி­யின் தங்கை.

இது சமூ­கத்­திற்­குத் தேவை­யான ஒரு படைப்பு என்­றும் அனை­வ­ரும் குடும்­பத்­து­டன் இதைப் பார்க்க வேண்­டும் என்­றும் கூறு­கி­றார் சமுத்­தி­ரக்­கனி.

"சில்வா திடீ­ரென ஒரு­நாள் என்னைத் தொடர்புகொண்டு பேசி­னார். பிறகு நேரில் வந்து ஒரு கதை­யைச் சொன்­னார். அவ­ரி­டம் இருந்து அப்­படி ஒரு கதையை நான் எதிர்­பார்க்­க­வில்லை.

"ஒரு தந்­தைக்­கும் மக­ளுக்­கும் இடை­யே­யான உணர்­வு­பூர்­வ­மான உறவை, அவர்­க­ளு­டைய வாழ்க்கைப் பய­ணத்தை விவ­ரிக்­கும் கதை அது. இரு­வ­ரும் எத்­த­கைய பிரச்சி­னை­களை எதிர்­கொள்­கி­றார்­கள் என்­பதை மனதை உருக்­கும் கதை­யாக உரு­வாக்கி உள்­ளார்.

"அதைக் கேட்டு முடித்த அடுத்த நிமிடமே படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டேன். இதுபோன்ற சிறந்த படைப்பில் நானும் இடம்பெற்றுள்ளேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார் சமுத்திரக்கனி.

"தந்தை, மகள் கதாபாத்திரங்கள் முக்கியமானவை என்பதால் சமுத்திரக்கனியை முதலில் தேர்வு செய்தோம். பிறகு மகள் பாத்திரத்திற்கு சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சரியாக இருப்பார் என இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறினார். நானும் அதை ஆமோதித்தேன்.

"நாங்கள் எதிர்பார்த்தபடியே மிக நேர்த்தியாக நடித்துள்ளார் பூஜா. நானும் விஜய்யும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளோம்," என்கிறார் அறிமுக இயக்குநர் சில்வா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!