வரிசை கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்

தமி­ழ­கத்­தில் திரை­ய­ரங்­கு­கள் நூறு விழுக்­காடு திறக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து முன்­னணி நாய­கர்­

க­ளின் படங்­கள் வேக­மாக

திரைகாண இருக்­கின்­றன. அதன்­படி அதிக பொருட்­

செ­ல­வில் எடுக்­கப்­பட்ட நான்கு படங்­கள் தொடர்ந்து 2022 ஏப்­ரல் மாதத்­திற்­குள் வெளி­யாக இருக்­கின்­றன. அத­னால் தங்­கள்

அபி­மான நடி­கர்­க­ளின் படங்

க­ளுக்­காக காத்­தி­ருந்த ரசி­கர்­கள் மகிழ்ச்­சி­யில் இருக்­கின்­ற­னர்.

கொரோனா தொற்று கார­ண­மாக உல­கம் முழு­வ­தும் பல வியா­பா­ரங்­கள் முடங்­கின. திரைப்­

ப­டங்­களும் வெளி­வர முடி­யா­மல் தள்ளிப் போயின. படப்­பி­டிப்பு நடத்த முடி­ய­வில்லை, நடந்தாலும் குறைந்த ஆட்­களை வைத்தே படப்­பி­டிப்பு நடத்த முடிந்­தது.

அத­னால் திரைத்­து­றை­யி­னர் பல

சிர­மங்­க­ளுக்கு ஆளா­னார்­கள்.

இதன் கார­ண­மாக குறிப்­பிட்ட தேதி­களில் படங்­களை வெளி­யிட முடி­ய­வில்லை. தற்­போது கொரோனா தொற்று மெல்ல குறைந்து வரு­வ­தால் தள்­ளிப்­போன படங்­கள் அனைத்­தும் அடுத்­த­டுத்து வெளி­வ­ரும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

தமி­ழில் முன்­னணி நாய­கர்­

க­ளின் படங்­கள் அடுத்­த­டுத்த மாதங்­களில் வெளி­வர உள்­ளன. விஜய், அஜித், சூர்யா, கமல், சிவ­கார்த்­தி­கே­யன், விக்­ரம், தனுஷ் என்று தமிழ்த் திரையின் உச்ச நட்­சத்­தி­ரங்­க­ளின் படங்­கள் அனைத்­தும் வரும் ஏப்­ரல் மாதத்­திற்­குள் வெளி­வர உள்­ளன.

விஜய் - நெல்­சன் கூட்­ட­ணி­யில் உரு­வா­கும் 'பீஸ்ட்' திரைப்­

ப­டம் தற்­போது படப்­பி­டிப்பு

முடி­யும் தறுவா­யில் உள்­ளது. ஏப்­ரல் மாதத்­தில் இப்­ப­டத்­தை வெளி­யிட படக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது.

அதே மாதத்­தில் கமல் - லோகேஷ் கூட்­ட­ணி­யில் உரு­வா­கும் 'விக்­ரம்' பட­மும் வெளி­வர உள்­ளது. விஜய்­சே­து­பதி, பகத் பாசில் மற்­றும் பல முக்­கிய நடி­கர்­கள் நடிக்­கும் இந்த படம் 'பீஸ்ட்' படத்­து­டன் மோத அதிக வாய்ப்­புள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.

அஜித் - வினோத் கூட்­ட­ணி­யில் எடுக்­கப்­பட்ட இரண்­டா­வது பட­மான 'வலிமை' வரும்

பொங்­கல் அன்று திரை­ய­ரங்­கில் வெளி­வர உள்­ளது. சில ஆண்டு­

க­ளாக எடுக்­கப்­பட்டு வரும் இப்­

ப­டம் வெளி­யி­டும் தேதி

முடி­வாகாமல் தள்ளிப் போய்க்­கொண்டு இருந்­தது. அண்­மை­யில் இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சி­கள் வெளி­வந்து ரசி­கர்­

க­ளி­டம் நல்ல வர­வேற்பைப்

பெற்­றுள்­ளது.

சூர்யா - பாண்­டி­ராஜ் கூட்­ட­ணி­யில் உரு­வான 'எதற்­கும் துணிந்­த­வன்' படம் 'வலிமை' படத்­து­டன் மோத இருந்­தது. இறு­தி­யில் பிப்­ர­வரி 4ஆம் தேதி வெளி­யா­கும் என்று படக்­குழு அறி­வித்­துள்­ளது.

அண்­மை­யில் திரை­ய­ரங்­கில் வெளி­யாகி மிகப்­பெ­ரிய வசூல் சாதனை படைத்த படம்

சிவ­கார்த்தி­கே­ய­னின் 'டாக்­டர்'. அதன் பிறகு அவர் நடித்து வரும் 'டான்' திரைப்­ப­டம் பிப்­ர­வரி மாதம் வெளி­வர உள்­ளது.

மணி­ரத்­தி­னம் இயக்­கத்­தில் மிகப்­பெ­ரிய பொருட்­செ­ல­வில் உரு­வாகி வரும் படம் 'பொன்­னி­யின் செல்­வன்'. இந்­திய சினி­மா­வில் உள்ள பல நட்­சத்­தி­ரங்­கள் இப்­ப­டத்­தில் நடித்து உள்­ள­னர். இரண்டு பாகங்­க­ளாக வெளி­

வ­ரும் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் முதல் பாகம் வரும்

ஏப்­ரல் அல்­லது மே மாதத்­தில் வெளிவர உள்­ளது.

தனுஷ் நடிக்­கும் 'மாறன்' மற்­றும்

விக்­ரம் நடிக்­கும் 'மகான்' படங்­கள் ஜன­வரி - ஏப்­ரல் மாதத்­தில் வெளி­வர உள்­ளன. இந்த இரண்டு படங்­களும் நேர­டி­யாக 'ஓடிடி'யில் வெளி­வர பேச்சு வார்த்தை நடை­பெற்று வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இவற்றுடன் 'ஆர்­ஆர்­ஆர்', 'புஷ்பா', 'ராதே சியாம்' போன்ற பெரிய படங்­களும் இந்த கால­கட்­டத்­தில் வெளி­வர உள்­ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!