மன உளைச்சலுக்கு ஆளான சூர்யா

'ஜெய் பீம்' படம் வெளி­யா­ன­தில் இருந்து விமர்­சன ரீதி­யாக மாபெ­ரும் வர­வேற்பைப் பெற்­றி­ருந்­தா­லும் அதே அளவு சர்ச்­சை­யி­லும் சிக்கி உள்­ளது. அத­னால் பெரும் மன உளைச்ச­

லுக்கு ஆளாகி இருக்­கி­றார் சூர்யா.

படத்­தின் சில காட்­சி­களை மாற்­றி­யும் சர்ச்­சை­கள் தொடர்ந்த வண்­ணம் இருக்­கின்­றன. இந்­நி­லை­யில் சிதம்­ப­ரம் நீதி­மன்­றத்­தில் சூர்யா, ஜோதிகா உள்­பட 5 பேர் மீது 8 பிரி­வு­க­ளின் கீழ் பர­ப­ரப்பு வழக்கு ஒன்றை பாதிக்­கப்­பட்­ட தரப்பு

தாக்­கல் செய்­துள்­ளது.

இவ்­வாறு 'ஜெய் பீம்' விவ­கா­ரம் 'விடாது கருப்­பாக' துரத்தி வரு­வ­தால் நடி­கர் சூர்யா குடும்­பத்­து­டன் துபாய்க்குச் சென்­றுள்­ளார்.

அங்கு சில நாட்­கள் ஓய்­வெ­டுத்து­விட்டு, மன நிம்­மதி அடைந்த

பின்­னரே அவர் இந்­தியா திரும்­பு­வார் என கூறப்­ப­டு­கிறது.

துபா­யில் இருந்து திரும்பி வந்­த­தும் வெற்­றி­மா­றன், சிவா, ரவிக்­

கு­மார் என சில இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் நடிப்­ப­தாக செய்­தி­கள் வெளி­யான நிலை­யில் டிசம்­பர் மாதம் முதல் பாலா இயக்­கும் படத்­தில் சூர்யா இரண்டு வேடங்­களில் நடிக்க இருப்­பது உறு­தி­யாகி உள்ளது.

இந்­தப் படத்தை முத­லில் அதர்­வாவை வைத்து பாலா இயக்­க­

இருந்த நிலை­யில் சூர்யா அந்­தப் படத்­தைத் தயா­ரிக்க இருந்­தார். ஆனால், திடீ­ரென்று கதை­யில் பாலா சில மாற்­றங்­களைச் செய்­த­தால் கதை சூர்­யா­விற்­குப் பிடித்­துப்போனது. அதனால் அந்­தப் படத்­தை அவரே தயாரித்து, அதில் இரண்டு நாய­க­னாக நடிக்கவும் முடிவு செய்­துள்­ளார் சூர்யா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!