முதலில் இவரைத்தான் மணக்க விரும்பினாராம் நாக சைதன்யா!

முதலில் இவரைத்தான் மணக்க விரும்பினாராம் நாக சைதன்யா!

1 mins read
d8e0bb0c-a1b7-4c8f-8ed1-803fd32fe879
2016ல் வெளியான 'பிரேமம்' தெலுங்குப் படத்தில் நாக சைதன்யாவும் ஷ்ருதியும் இணைந்து நடித்திருந்தனர். படம்: இணையம் -

நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் தங்களது திருமண உறவை முறித்துக்கொள்வதாக அண்மையில் அறிவித்தனர். மணமுறிவு கோரி அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்நிலையில், நாக சைதன்யா முதலில் திருமணம் செய்ய விரும்பியது சமந்தாவை அல்ல என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2017 அக்டோபரில் சமந்தா - நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது.

ஆனால், அதற்குமுன் அவர் நடிகை ஷ்ருதி ஹாசனை மணந்துகொள்ள விரும்பியதாக koimoi.com எனும் திரையுலக இணையத்தளச் செய்தி கூறுகிறது.

2016ல் வெளியான 'பிரேமம்' தெலுங்குப் படத்தில் நாக சைதன்யாவும் ஷ்ருதியும் இணைந்து நடித்திருந்தனர்.

இருவரும் 2013ல் முதன்முதலாகச் சந்திதத்தாகவும் அப்போதே ஒருவருக்கொருவர் பிடித்துப்போனதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், அந்த உறவு தொடர்ந்து, திருமணத்திற்கு இட்டுச் செல்லவில்லை.

கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தாங்கள் பிரிவதாக சமந்தாவும் நாக சைதன்யாவும் சமூக ஊடகம் வழியாக அறிவித்தனர்.