அபிஷேக் பச்சன் நடிப்பில், பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ளது 'இரவின் நிழல்'. படம் முழுவதும் ஒரே காட்சிதான் இடம்பெறுமாம்.
இது வழக்கமான கதையல்ல என்கிறார் பார்த்திபன். 'ஒத்த செருப்பு' தந்த அனுபவத்தில் இந்தப் படத்தை உருவாக்கியதாகவும் சொல்கிறார்.
"உண்மையில் இந்தப் படத்துக்கு 50 கோடியாவது செலவாகும். அதைக் குறைக்க வேண்டும் எனில் இதை சாமர்த்தியமாக உருவாக்க வேண்டும். நேர்மையாக ஒப்புக்கொண்டால், ரஜினி, அஜித், விஜய்யோடு வியாபாரத்தில் போட்டி போட முடியாது. ஆனால் தொடர்ந்து அவர்களுடன் போட்டியில் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.
"இந்தப் படத்தில் மொத்தம் 340 பேர் பணியாற்றி உள்ளோம். அனைவரும் மனம் ஒருமித்து 90 நாள்கள் ஒத்திகை பார்த்து படத்தை உருவாக்கினோம்.
"95 நிமிடங்கள் ஓடும் படத்துக்கு நிறைய மெனக்கெடல் தேவைப்பட்டது. யாராவது ஒருவர் சிறு தவறு செய்தால் கூட அனைத்தையும் நிறுத்தி, மீண்டும் தொடக்கத்தில் இருந்து செய்ய வேண்டியிருக்கும்.
"ஐஸ்வர்யா ராயிடம் 'பொன்னியின் செல்வ'னில் நடிக்கும்போது 'ஒத்த செருப்பு' படத்தைப் போட்டுக் காட்டினேன். அதன் பின்னர் அபிஷேக் நடிக்க, அமிதாப் தயாரிக்க என்று உடனே முடிவானது.
"அபிஷேக் பச்சனுக்கு நடிப்பு பிரமாதமாகக் கைவந்துவிட்டது. போலிஸ் விசாரணைக்கான மனநிலையில் அசத்தி உள்ளார்.
"உணர்ச்சிகரமாக, மகிழக்கூடிய விதத்திலும் மனதை உலுக்குவதாகவும் இந்தப் படம் இருக்கும். ஹாலிவுட்டுக்கும் இந்தப் படத்தைக் கொண்டு செல்ல பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
"டென்ஸில் வாஷிங்டன் அல்லது வில் ஸ்மித் நடிக்கக்கூடும். இந்த 'ஒத்த செருப்பு' படம் இந்திக்கு அழைத்துச் சென்றதோடு நிற்காமல், ஹாலிவுட்டுக்கும் அழைத்துச் செல்கிறது," என்கிறார் பார்த்திபன்.