திரைத் துளி­கள்

நடன இயக்­கு­ந­ரா­க­வும் நடி­க­ரா­க­வும்

பணி­யாற்­றிய சிவ­சங்­கர் மாஸ்­டர், கொரோனா தொற்­றி­னால் 75 விழுக்­காடு நுரை­யீ­ரல் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரது மனைவி, மூத்த மகன் ஆகி­யோ­ரும் கொரோனா­வால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். இளைய மகன் அஜய் நிதி உதவி கேட்டு பதி­விட்­டி­ருந்­தார். உடனே பாலி­வுட் நடி­கர் சோனு சூட்

அவ­ரைத் தொடர்புகொண்டு மருத்­து­வச் செல­வு­களை ஏற்­றுக்­கொள்­வ­தாக கூறி உதவி வரு­கி­றார். இதற்கிடையில் நடி­கர்

தனு­ஷும் உதவ முன்­வந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ராமச்­சந்­திரா மருத்­து­வ­ம­னை­யில் கொரோனா தொற்று கார­ண­மாக அனு­ம­திக்­கப்­பட்டு இருக்­கும் நடி­கர் கம­ல்ஹாசனுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் விரை­வில் அவர் உடல்­

ந­லம் தேறி வீடு திரும்­பு­வார் என்றும் மருத்­து­வ­மனை நிர்­வா­கம் அதி­கா­ரபூர்­வ­மாக அறி­வித்­துள்ளது. கமல்­ஹா­ச­னின் மகள்

ஷ்ரு­தி­யும், "என் தந்தை நல­மாக இருக்­கி­றார். விரை­வில் உங்­க­ளைக் காண வரு­வார்," என்று பதி­விட்டு இருக்­கி­றார்.

முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டா­லின், திரை­யு­லக பிர­ப­லங்­கள் பல­ரும் கமல்­ஹா­சன் விரைந்து குண­ம­டைய வேண்டி வாழ்த்து தெரி­வித்து வருகின்றனர். இசை­ஞானி இளை­ய­ராஜா, "நல­மாக வர­வேண்­டும் சகோ­த­ரரே! கலை உலகை ஆச்­ச­ரி­யப்­பட வைக்க விரைந்து வாருங்­கள்," என்று டுவிட்­ட­ரில் பதி­விட்டு இருக்­கி­றார்.

ஆந்­திர மாநி­லத்­தில் சினிமா டிக்­கெட் கட்­ட­ணங்­களை

அதி­ர­டி­யா­கக் குறைத்­தி­ருக்­கிறது ஆந்­திர அரசு. அத­னைத்­

தொ­டர்ந்து மூத்த நடி­கர் சிரஞ்­சீவி, "திரை­ய­ரங்­கு­கள் செயல்­

ப­டு­வ­தற்­கும் திரை­யு­ல­கத்தை நம்பி பல குடும்­பங்­கள்

வாழ்­வ­தா­லும் குறைக்­கப்­பட்ட டிக்­கெட் கட்­ட­ணங்­களை மற்ற

மாநி­லங்­களில் உள்­ளது போன்று மாற்­றி­ய­மைக்க வேண்­டும். இதைத் தய­வு­செய்து மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும். ஊக்­கம் இருந்­தால் மட்­டுமே தெலுங்குத் திரை­யு­ல­கம் வாழ முடி­யும்," என்று ஆந்­திர முதல்­வ­ருக்கு கோரிக்கை விடுத்­துள்­ளார்.

நடி­கர் யோகி­பாபு

தற்­போது 'பொம்மை நாயகி' என்ற படத்­தில் கதா­நா­ய­க­னாக நடித்து முடித்­தி­ருக்­கி­றார். ஜன­வரி மாதம் துவங்­கிய இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு கொரோனா இரண்­டா­வது அலை­யால் தற்­கா­லி­க­மாக தடை­பட்டு தற்­போது நிறை­வ­டைந்­துள்­ளது. இந்த மகிழ்ச்­சியை படக்­கு­ழு­வி­ன­ரு­டன் யோகி­பாபு கேக் வெட்டி கொண்­டா­டிய புகைப்­ப­டங்­கள் வலைத்த­ளங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, 'ஜெய் பீம்' படத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேலுவை பாராட்டி இருக்கிறார். மீண்டும் அந்தப் படத்தைத் திரையில் காண விருப்பம் தெரிவித்ததோடு நடிகர் சூர்யா, சிவக்குமார், த.செ.ஞானவேலு ஆகியோருடன் திரையரங்கில் படத்தைப் பார்த்துவிட்டு சூர்யாவின் கன்னத்தைச் செல்லமாக வருடி கொடுத்து தன்னுடைய பாராட்டைப் பதிவு செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!