தமிழ்த் திரையில் பல முன்னணி நடிகைகள் அம்மன் வேடத்தில் நடித்து உள்ளனர். கடந்த ஆண்டு
ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்த 'மூக்குத்தி
அம்மன்' படத்தில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா அம்மனாக நடித்து அசத்தி இருந்தார்.
நயன்தாராவைத் தொடர்ந்து அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க
நடிகைகள் ஆர்வம்
காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை தமன்னா அப்படியொரு வேடத்தில் காட்சி அளித்துள்ளார்.
நடிகை தமன்னா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அம்மன் வேடத்தில் தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்து
உள்ளார். அதில் "வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை நான் கடவுளாகவே உணர்
கிறேன்," என்று அவர் பதிவிட்டு உள்ளார்.
இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமன்னா அம்மனாக நடிக்கிறாரா? அல்லது ஏதாவது விளம்பரப் படமா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும் இந்த புகைப்படத்தைப் பதிவு செய்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் நான்கு லட்சம் 'லைக்ஸ்' குவிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கொரோனாவிலிருந்து மீண்ட தமன்னா கடும் உடற்பயிற்சி செய்து
மீண்டும் பழைய நிலைக்கு வந்தார். அப்போது அவர் கவர்ச்சியான உடையை அணிந்து பொது வெளியில் காணப்பட்டார். அந்தப் படங்கள் வலைத்
தளங்களில் பரவி வந்தன. தற்பொழுது இவர்
அம்மனாக எடுக்கப்பட்ட படமும் வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.