விஜய் சேதுபதி நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகிறது.
டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் நயன்தாரா, சமந்தா என இரு நாயகிகள் உள்ளனர். கதைப்படி நாயகன், நாயகிகளின் பெயர்களை இப்படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். படப்பிடிப்பின் இறுதி நாள்களில் திடீரென நடிகர் பிரபு இதில் ஒப்பந்தமானார். அவர் சம்பந்தப்பட்ட காட்சி களை மிக விரைவாகப் படமாக்கி, தற்போது தொழில்நுட்பப் பணிகளைத் துவக்கி உள்ளார் விக்னேஷ் சிவன்.
தமது உடல்நலம் குறித்து வெளியாகும் வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
"எனக்கு எல்லாமே சினிமா தான். இப்போது ஓய்வெடுத்து வருகிறேன். விரைவில் படங்களில் நடிப்பேன்," என்கிறார் பவர் ஸ்டார்.
'மாநாடு' படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு, தனது சமூக வலைத்தளத்தில், "மாநாடு படம் பார்த்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு படக்குழுவுக்கு தலைவர் (ரஜினிகாந்த்) வாழ்த்து தெரிவித்தார்," என்று பதிவிட்டுள்ளார்.
தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது 'தேள்' திரைப்படம். தாயாக ஈஸ்வரி ராவும் மகனாக பிரபுதேவாவும் நடித்துள்ளனர். உணர்வுபூர்வமான இந்தப் படத்தில் முதன்முறையாக நடனம் ஆடாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி உள்ளாராம் பிரபுதேவா. "தாம் ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே பிரபுதேவா மாறிவிட்டார். கதைப் படி, அவர் இடதுகை பழக்கம் உள்ளவர். வசனங்கள் குறைவு என்பதால் படம் முழுவதும் முகபாவனைகள் மூலமாகவே பல விஷயங்களை மற்ற பாத்திரங்க ளுக்கு கடத்துவார்்," என்கிறார் இயக்குநர் ஹரிக்குமார்.

