‘மாநாடு’ வெற்றியைக் கொண்டாடிய சிம்பு

பல தடை­க­ளைத் தகர்த்து, வெற்றி நடை­போ­டு­கிறது சிம்பு நடித்­தி­ருக்­கும் ‘மாநாடு’ படம். படத்­தைப் பற்றி

பல­ரும் நல்ல விமர்­ச­னங்­க­ளையே பதிவு செய்து வரு­கின்­ற­னர்.

அத­னால் பெரி­தும் மகிழ்ந்­தி­ருக்­கும் சிம்பு, படத்­தின் தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்­சி­யு­டன் இணைந்து கேக் வெட்டி படத்­தின் வெற்­றி­யைக் கொண்­டாடி இருக்­கி­றார்.

சுரேஷ் காமாட்சி தயா­ரிப்­பில், வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் சிம்பு நடித்­தி­ருந்த இந்­தப் படத்­திற்­காக ரசி­கர்­கள் வெகு நாட்­க­ளாக காத்­தி­ருந்­தனர். பல­வித தடை­க­ளுக்கு மத்­தி­யில் கடந்த வியா­ழக்­கி­ழமை திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கி­யுள்ள இந்­தப் படம் ரசி­கர்­க­ளி­டம் அமோக வர­வேற்­பைப் பெற்று வரு­கிறது.

யுவன் ஷங்­கர் ராஜா இசை­ய­மைத்­துள்ள இந்­தப் படத்­தின் இசை

வெளி­யீட்டு விழா அண்­மை­யில்

சென்­னை­யில் நடை­பெற்­றது.

அந்த விழா­வில் சிம்பு கண்­ணீ­ரு­டன், “நிறைய பிரச்­சினை கொடுக்கு­றாங்க. அதை­யெல்­லாம் நான்

பார்த்­துக்­கி­றேன். என்னை மட்­டும் நீங்க பார்த்­து­கோங்க,” என்று பேசி­யது ரசி­கர்­கள் அனை­வ­ரை­யும் கலங்க வைத்­தது.

பட­மும் தடங்­கல்­க­ளைத் தாண்டி வெளி­யாகி வெற்றி பெற்­றுள்­ளது. ‘மாநாடு’ படத்­தின் வெற்­றியை தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்­சி­யும் நடி­கர் சிம்­பு­வும் இணைந்து கேக் வெட்டி, இரு­வ­ரும் மாறி மாறி ஊட்டிக்கொள்­ளும் புகைப்­ப­டங்­கள் இணை­யத்­தில் பரவி வரு­கின்றன.

இந்­நி­கழ்­வில் வெங்­கட் பிரபு, யுவன் ஷங்­கர் ராஜா உள்­ளிட்ட படக்­கு­ழு­வி­னர் யாரும் இல்­லா­தது ஏன் என்ற கேள்­வி­யும் ரசி­கர்­கள்

மத்­தி­யில் எழுந்­துள்­ளது.

இந்தப் படம் குறித்து படத்­தின் இயக்­கு­நர், தயா­ரிப்­பா­ளர் உள்­ளிட்ட படக்­கு­ழு­விற்கு ரஜி­னி­காந்த், சூர்யா

சிவ­கார்த்­தி­கே­யன் என திரைப்

பிர­ப­லங்­கள் பல­ரும் வாழ்த்து

தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் ‘மாநாடு’ குறித்து வெங்­கட் பிரபு அளித்­துள்ள பேட்­டி­யில் பல சுவா­ரஸ்­ய­மான செய்­தி­

க­ளைப் பகிர்ந்­துள்­ளார்.

“வில்­லன் வேடத்­தில் நடித்­தி­ருக்­கும் எஸ்.ஜே.சூர்யா கதா­பாத்­தி­ரத்­தில் முத­லில் நடிக்க அர­விந்த்­சா­மி­யைத்­தான் கேட்­டி­ருந்­தேன். அவ­ருக்­கா­கவே வச­னங்­கள் எழு­தப்­பட்­டன. ஆனால், படப்­பி­டிப்­புத் துவங்க நீண்ட இடை­வெளியான­தால் அர­விந்த்­சாமி அதி­லி­ருந்து வில­கி­னார். அதன்

பின்­னர்­தான் எஸ்.ஜே.சூர்­யாவை

ஒப்­பந்­தம் செய்­தோம்.

“கதை­யைக் கேட்­ட­தும் உடனே ஒத்­துக்­கொண்­டார் எஸ்.ஜே.சூர்யா. பின்­னர் அவ­ருக்­காக வச­னங்­களை மாற்றி எழு­தி­னோம். நல்ல வாய்ப்பை இழந்­தார் அர­விந்த்­சாமி.

“மாநாடு’ பட பிரச்­சினை தெரிந்­த­வு­டன் நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன்

நள்­ளி­ர­வில் என்­னு­டன் தொடர்­பு­கொண்டு எது­வும் உதவி வேண்­டுமா? என்று விசா­ரித்­தார்,” என்று நெகிழ்­வு­டன் கூறி­னார் இயக்­கு­நர்.

இதற்­கி­டை­யில் ‘ஜெய் பீம்’ படத்­தைப்­போல ‘மாநாடு’ பட­மும்

சர்ச்­சை­யில் சிக்­கி­யுள்­ளது.

“இந்­தப் படத்­தில் ‘இந்து -

முஸ்­லீம் ஒற்­று­மையைச் சீர்­கு­லைக்­கும் வித­மாக காட்­சி­கள் உள்­ளன. பட விவ­கா­ரத்­தில் முத­ல­மைச்­சர் தலை­யிட வேண்­டும். மேலும் சர்ச்­சைக்­கு­ரிய காட்­சி­கள் நீக்­கப்­பட வேண்­டும்,” என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சிம்பு முதன்­மு­றை­யாக இஸ்­லா­மி­ய­ராக நடித்­துள்ள ‘மாநாடு’ படத்­தில், “அமெ­ரிக்­கா­வில் குண்டு வெடித்­தால் தீவி­ர­வாதி என்­கி­றோம். அதுவே இந்­தி­யர் என்­றால் முஸ்­லிம் தீவி­ர­வாதி என்­கி­றோம். தீவி­ர­

வா­திக்கு ஏது சாதி, மதம்,” போன்ற அனல் தெறிக்­கும் வச­னங்­கள் இடம்­பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் படத்தில் சிம்பு புகைபிடிக்கும் காட்சிகளில் ‘புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு’ என்ற சொற்றொடரை திரையில் வெளியிட வில்லை என்றும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. சூர்­யா­வின் ‘ஜெய் பீம்’ படத்­தைப்போல ‘மாநாடு’ பட­மும் சர்ச்­சை­யில் சிக்­கி­யுள்­ளது.

பிரச்­சினை ஒரு­பக்­கம் இருந்­தா­லும் சிம்புவின் அலட்டல் இல்லாமல் அடக்கமாக வெளி­யா­கி­யுள்ள இந்­தப் படம் சிலம்­ப­ர­ச­னின் புதிய பரி­மா­ணத்தை வெளிக்­கொ­ணர்ந்­துள்­ளது என்­கின்­ற­னர் படம் பார்த்­த­வர்­கள்.

‘மாநாடு’ படத்தில் சிம்புவும் காவலராக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவும் மோதிக்கொள்ளும் காட்சி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!