திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

1 mins read
70cda634-8f38-45dd-8615-d7a46e1133fd
-
multi-img1 of 3

தமிழ்த் திரையில் பின்னணிப் பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். பாடகர்களில் ஒரு பாட்டுக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கி, கடந்த சில ஆண்டுகளாக அதே இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் சித் ஸ்ரீராம்.

பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல இந்தி பாடகியான ஷ்ரேயா கோஷல். ஒரு பாட்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து மூன்றரை லட்சம் வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர்,

4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதில் இருந்து இந்தி படங்களில் பாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.

இவருக்கு அடுத்த இடத்தில், அதிக சம்பளம் வாங்கும் பாடகி, சாதனா சர்கம். ஒரு பாடலுக்கு ரூ.2 லட்சம் வாங்குகிறார். மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில், தாபோல் துறைமுக நகரில் உள்ள இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர்.