'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். அதன் பின்னர் 'சார்பட்டா
பரம்பரை' படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார். இவர் திறமையும் உழைப்பும் இருந்தால் கட்டாயம் வெற்றி நம் பக்கம் என்று அண்மைய பேட்டியில் கூறியிருக்கிறார்.
குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளியான 'சார்பட்டா பரம்பரை'
படத்தில் வழி தவறும் ஆர்யாவை
வழிநடத்த ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் துஷாரா.
குழந்தையுடன் பரிதவிக்கும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. குறிப்பாக, "எனக்கு மாரியம்மா போல ஒரு மனைவி அமைய மாட்டாளா?" என்று பலர் பதிவிட்டு இருந்தனர்.
இந்தப் படம் கொடுத்த வெற்றி
இவருக்கு அடுத்தடுத்த படங்களுக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளது.
வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாசுடன் 'அநீதி' என்ற படத்திலும்
பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ்
ஜெயராமுடன் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்திலும் இவர் தற்போது நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.
"வெற்றி கிடைத்தால் தலைக்கு
ஏற்றாமல் இருப்பதும் தோல்வி கிடைத்தால் சமாளித்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதும் வாழ்க்கையில் அவசியம்.
சினிமா பொறுத்தவரை வெற்றி, தோல்வி இரண்டையும் நம்பக்கூடாது. நமது திறமையை மட்டுமே நம்பி தொடர்ந்து உழைக்க வேண்டும்," என்று கூறியுள்ளார் துஷாரா.
மேலும் தனது திறமைக்குச் சவால் தரும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னுடைய கதைத் தேர்வு தனக்கு மிகவும் முக்கியமானது என்றும் பொறுமையே தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தனக்கு அனைத்தும் சினிமாதான் என்றும் அவர் உற்சாகமாக கூறினார்.
பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் திறமையைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டால் தகுந்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்றும் தான் இந்த இடத்தை அடைவதற்காக 7 ஆண்டுகள் போராடியதாகவும் தன்னுடைய
திறமைக்குச் சவால்விடும்
வகையில் திரையில் சில
நிமிடங்கள் வந்தாலும் தன்னுடைய கதாபாத்திரம்
மக்கள் மனதில் நிலைக்க வேண்டும் என்பதை
மனதில் கொண்டு கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து வருவதாகவும் கூறினார் துஷாரா விஜயன்.
கோலிவுட்டில் மட்டுமல்ல; திறமை இருந்தால் அண்மைக்காலமாக எங்கிருந்தாலும் பெண்கள் அங்கீகரிக்கப்பட்டு வருகின் றனர். வாய்ப்பை நாமே உருவாக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவும் தெரிய வேண்டும். இது பெண்களுக்கு மிகவும் முக்கியம்.
திறமையை வளர்த்துக்கொண்டே இருந்தால், தகுந்த வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார் அழகுடன் திறமையும் கொண்ட துஷாரா விஜயன்.

