தமது அடுத்த படத்துக்காக இயக்குநர் மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்துக்காக வடிவேலுவையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். படம் முழுவதும் நகைச்சுவை நிரம்பி இருக்குமாம்.
வடிவேலு கதாபாத்திரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கு மாறு உதயநிதி கேட்டுக் கொண்டதை அடுத்து, காட்சி அமைப்பிலும் வசனங்களிலும் சில மாற்றங்களைச் செய்ய உள்ளாராம் மாரி செல்வராஜ். தற்போது சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் வடிவேலு. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.

