தன்னுடைய திறமை மூலம்
முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் அண்மையில் வெளியான 'டாக்டர்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத்
தொடர்ந்து இவர் நடிக்கும் 'டான்' படம் காதலர் தினத்தன்று வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக முதன்முதலாக பணிசெய்து அதன் மூலம் விளம்பரங்களில் நடித்து, பிரபலமாகி,
மற்றொரு தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி தன்னுடைய திறமையைக் காட்டி, அதில் வெற்றி பெற்று, பின்னர் மக்களின் பேராதரவுடன் திரையில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'டாக்டர்' படம் ரசிகர்களிடம் அமோக
வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
கடந்த பிப்ரவரி மாதம் 'டான்' படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
இடையில் கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் மீண்டும் துவங்கியது.
அண்மையில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு
விறுப்பாக நடைபெற்று முடிந்து உள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர்.
பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும்
இந்தப் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷசன்ஸ் தயாரித்து இருக்கிறது.
இந்நிலையில் அண்மையில் படத்தின் குரல் பதிப்பு பணிகள் துவங்கியுள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்தது. அதில்
சிவகார்த்திகேயனும் சூரியும் தங்கள் குரல் பதிப்பு பணிகளை நிறைவு செய்து படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 'டான்' படத்தின் முதல்
சுவரொட்டியும் வெளியாகி ரசிகர்
களிடம் வரவேற்பைப் பெற்றது.
'டான்' படத்தை இந்தாண்டு
இறுதியில் கிறிஸ்மஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் வெளியாவதால் 'டான்' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி 'டான்' படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம்
14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயனின் நண்பர் நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் நாயகனாக நடிக்கும் படம் 'நாய் சேகர்'. 'நாய் சேகர்' என்றதும் 'தலைநகரம்' படத்தில் வரும் வடிவேலுவின் வேடம்தான் பலருக்கும் நினைவுவரும். இதே பெயரில் வடிவேலுவை வைத்து சுராஜ் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
அந்தப் படத்திற்கு முன் சதீஷ் நடித்திருக்கும் 'நாய் சேகர்' படத்தை வெளியிட இருக்கின்றனர். இந்தப் படத்தில் நண்பருக்காக ஒரு பாடலை எழுதியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இதற்கு முன் விஜய்யின் 'பீஸ்ட்', சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படங்களிலும் சிவகார்த்திகேயன் தலா ஒரு பாடல் எழுதி
யிருந்தது குறிப்பிடத்தக்கது.

