ரவி வர்மாவின் ஓவியத்திற்கு உயிரூட்டிய கீர்த்தி

1 mins read
4ec74de8-edee-44f8-a33a-867fe2e47851
-
multi-img1 of 2

கீர்த்தி சுரேஷ் பிர­பல ஓவி­யர் ரவி­ வர்­மா­வின் ஓவி­யத்­தைப் பார்த்து அது­போ­லவே அலங்­கா­ரம் செய்­து­கொண்டு 'மரைக்­காயர் அர­பிக்­க­ட­லின்டே

சிம்­மம்' என்ற மலை­யா­ளப் படத்­தில் மோகன்­லா­லு­டன் இணைந்து நடித்­தி­ருக்­கி­றார்.

தமிழ், தெலுங்கு, கன்­ன­டம், இந்தி, மலை­யா­ளம் என ஐந்து மொழி­களில் இந்தப் படம் மொழி மாற்­றம் செய்­யப்­பட்டு இன்று திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கின்­றது.

மலையாளப் படங்களிலேயே அதி­கப் பொருட் செல­வில் எடுக்­கப்­பட்­டுள்ள இந்­தப் படம் வெளி­யா­வ­தற்கு முன்பே பல விருதுகளைப் பெற்றிருக்கிறது.

67வது தேசிய திரைப்­பட விழா­வில் சிறந்த திரைப்­ப­டம், சிறந்த 'ஸ்பெ­ஷல் எஃபெக்ட்ஸ்', சிறந்த ஆடை வடி­வ­மைப்பு உள்­ளிட்ட பிரி­வு­க­ளுக்­காக விரு­து­களை வென்­றுள்­ளது 'மரைக்­காயர் அர­பிக்­க­ட­லின்டே சிம்­மம்' படம். பாரம்­ப­ரிய மலை­யா­ளப் பெண்­ணாக கீர்த்தி சுரேஷ் தோன்றி அனை­வ­ரின் மனங்­

க­ளை­யும் கவர்ந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் தனது கதா­பாத்­தி­ரத்­தின் பின்­னணி ரக­சி­யத்தை வலைத்­த­ளத்­தில் வெளி­யிட்­டுள்­ளார் கீர்த்தி சுரேஷ்.

"மரைக்­காயர் படத்­தில் 'ஆர்சா' என்ற வேடத்­தில்­தான் நடித்­தி­ருக்­கி­றேன். எனது வேடத்­திற்கு ஏற்ற ஆடை வடி­வ­மைப்­புக்கு ஆதா­ரம் ரவி­வர்­மா­வின் ஓவி­யங்­கள்­தான்," என்று அசல், நகல் படங்­களைத் தன்­னு­டைய வலைத்­த­ளத்­தில் பதி­விட்டு இருக்­கி­றார்.

பழங்­கால ராணி­யைப்­போ­லக் காட்­சி­ய­ளிக்­கும் கீர்த்தி

சுரே­ஷின் அழகை வர்­ணித்து

அத்­து­டன் அவ­ரின் படத்­தை­யும் தங்­க­ளு­டைய வலைத்­த­ளங்­களில் பதிவிட்டு பகிர்ந்து வரு­கின்­ற­னர் கீர்த்தி சுரே­ஷின்

ரசி­கர்­கள்.