அன்பு ரசிகரைத் தேடும் விஜய் ஆண்டனி

3 mins read
7a36959a-2d20-4ccd-9ac5-5077e249c13b
-
multi-img1 of 2

இசை அமைப்­பா­ள­ராக பல்­வேறு அதி­ர­டி­யான வெற்றி பெற்ற

ஆல்­பங்­க­ளின் மூலம் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­த­வர் விஜய்

ஆண்­டனி. இசை­ய­மைப்­பா­ள­ராக மட்­டு­மல்­லா­மல் தற்­பொழுது

நடி­க­ரா­க­வும் தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் வலம்­வந்து கொண்­டி­ருக்­கி­றார். இந்­நி­லை­யில் விஜய் ஆண்­டனி தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பகிர்ந்­துள்ள பதிவு ஒன்று இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

விஜய் ஆண்­டனி திரைப்­ப­டங்­

க­ளுக்கு இசை­ய­மைப்­ப­தற்கு முன்­னர் தொலைக்­காட்சி தொடர்­க­ளுக்கு இசை­ய­மைத்து வந்­தார்.

இவர் இசை­ய­மைத்த முதல் தொடர் சன் தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா'. அத­னைத் தொடர்ந்து விஜய் தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பாகி மக்­கள் மன­தில் நீங்கா இடம் பிடித்த 'கனா காணும் காலங்­கள்', 'காத­லிக்க நேர­மில்லை', போன்ற தொடர்­க­ளுக்கு இசை­ய­மைத்­தார்.

தொடர்ந்து பல்­வேறு வெற்றி ஆல்­பங்­களை கொடுத்த விஜய் ஆண்­டனி 'நான்' படத்­தின் மூலம் கதா­நா­ய­க­னாக அறி­மு­க­மா­னார். அத­னைத் தொடர்ந்து வித்­தி­யா­ச­மான படங்­க­ளைக் கொடுத்து தனக்­கென ஓர் இடத்­தைப் பிடித்­துள்­ளார்.

'பிச்­சைக்­கா­ரன்' திரைப்­ப­டத்­தின் கதை­யும் இவர் ஏற்று நடித்த கதா­பாத்­தி­ர­மும் விஜய் ஆண்­ட­னிக்கு என்றே தனி ரசி­கர் கூட்­டத்­தைச் சேர்த்­தது. குறிப்­பாக பெண்­கள் மன­தில் இடம் பிடித்­தார்.

விஜய் ஆண்­டனி நடித்து அண்­மை­யில் வெளி­யான திரைப்­ப­டம் 'கோடி­யில் ஓரு­வன்'. இந்­தத் திரைப்­

ப­டத்­தி­லும் அம்­மா­வின் கனவை நிறை­வேற்­றும் இளை­ஞ­னாக நடித்­தி­ருந்­தார். இத்­தி­ரைப்­ப­டம் மக்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்­றது.

இந்­நி­லை­யில், இயக்­கு­நர் பாபு யோகேஸ்­வ­ரன் இயக்­கத்­தில் விஜய் ஆண்­டனி நடிப்­பில் உரு­வாகி உள்ள 'தமி­ழ­ர­சன்' இந்த மாத இறு­தி­யில் வெளி­யா­கும் என்ற தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இத்­தி­ரைப்­ப­டத்­தினை தயா­ரிப்­பா­ளர் எஸ் கவு­சல்யா ராணி தயா­ரிக்க, இசை­ய­மைப்­பா­ளர் இளை­ய­ராஜா இசை­ய­மைத்துள்ளார்.

'திமிரு புடிச்­ச­வன்' திரைப்­ப­டத்­தி­னைத் தொடர்ந்து இத்­தி­ரைப்­

ப­டத்­திலும் காவ­ல் அதிகாரியாக நடித்­துள்­ளார் விஜய் ஆன்­டனி.

மேலும் 'அக்னி சிற­கு­கள்', 'காக்கி' உள்­ளிட்ட படங்­களில் நடித்து வரு­கி­றார். இந்­நி­லை­யில் அண்­மை­யில் விஜய் மில்­டன் இயக்­கும் புதிய படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மா­னார்.

இந்­தப் படம் ஏற்­கெ­னவே விஜய் ஆண்­டனி நடிப்­பில் வெளி­யாகி

ரசி­கர்­க­ளி­டம் வர­வேற்­பைப் பெற்ற 'சலீம்' படத்­தின் தொடர்ச்­சி­யாக உரு­வாக உள்­ளது.

இந்­தப் படத்­திற்கு 'மழை பிடிக்­காத மனி­தன்' என்று வித்­தி­யா­ச­மாக பெயர் வைத்­துள்­ள­னர். இதன் படப்­பி­டிப்பு தற்­போது நடை­பெற்று வருகிறது.

இந்­நி­லை­யில் தனது ரசி­கர் ஒரு­வர் விஜய் ஆண்­டனி பாணி­யில் 'ஜிப்­ரிஸ்' வார்த்­தை­களில் வெளி­யான இரு­பத்தி நான்கு பாடல்­

க­ளை­யும் அவற்­றின் கால அள­வை­யும் உண­வ­கங்­களில் வழங்­கப்­படும் பில்­போல வடி­வ­மைத்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதைப் பல­ரும் பகிர்ந்­த­தால் யார் அந்­தப் பட்­டி­ய­லைத் தயார் செய்­தார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அத­னால் அவ­ரைக் காண­வேண்டி தனது டுவிட்­டர் பக்­கத்­தில், "எனக்கே என்­னு­டைய அன்­பான ரசி­க­ரைப் பார்க்­க­வேண்­டும்­போல ஆசை­யாக இருக்­கிறது. யாரப்பா நீ?" என்று பதி­விட்­டுள்­ளார் விஜய் ஆண்­டனி.விஜய் ஆண்­டனி பகிர்ந்­துள்ள இந்தப் பதிவு இணை­யத்­தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

கட்டண அட்டவணைப் போன்று விஜய் ஆண்டனி பாடி இருக்கும் பாடல்களையும் எவ்வளவு நேரம் அந்த பாடல் இடம்பெறுகிறது என்பதையும் பட்டியலிட்டு டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனியின் ரசிகர் ஒருவர்.