'ஜெயில்', 'பேச்சுலர்', 'செல்ஃபி' என ஒரே சமயத்தில் ஐந்தாறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவற்றுள் 'பேச்சுலர்' படம் வெளியீடு கண்டுள்ளது.
இது நவீன காலத்து காதலை சித்திரிக்கும் படமாக உருவாகி உள்ளது என்றும் யதார்த்தமான திரைக்கதை அமைப்பு ரசிகர்களைக் கவரும் என்றும் ஜி.வி.பிரகாஷ் சொல்கிறார்.
"இயக்குநர் சதீஷ் செல்வகுமாரின் நண்பர் ஒருவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையை இயல்பாக பிரதிபலிக்கும் படைப்பு என்பதால், இதில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.
"படப்பிடிப்புக்குச் செல்லும் முன்பு, சோதனை முயற்சியாக சில காட்சிகளைப் படமாக்கிப் பார்த்தோம். அவை மனநிறைவு தந்ததை அடுத்து படப்பிடிப்பைத் தொடங்கினோம்.
"இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களால் நிச்சயம் பேசப்படும். மேலும், நல்ல நடிகன் என்ற பெயரையும் பெற்றுத்தரும் என நம்புகிறேன்.
"காதல் படம் என்பதால் ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்படும் முன்பே கதாநாயகி திவ்யபாரதியிடம் அதுகுறித்து விவாதிப்பேன். இதன் காரணமாக இருவரது உடல்மொழியும் கச்சிதமாக அமைந்துள்ளது என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

