'மாநாடு' திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ஐம்பது கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் தமக்கு இந்தப் படம் பெரிய லாபத்தை ஈட்டித்தரவில்லை என்கிறார் சுரேஷ் காமாட்சி.
"ஒரு படத்தின் வியாபாரம், அதில் நடித்த நாயகனின் முந்தைய படத்தின் வசூலைப் பொறுத்தே அமையும். சிம்புவின் முந்தைய படம் எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை. ஆனால், அவர் அடுத்து நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தைப் பெற்றுத்தரும். எனினும், ஒரு நல்ல படத்தை தயாரித்த மகிழ்ச்சி எனக்கு உள்ளது," என்கிறார் சுரேஷ் காமாட்சி.

