திரைத் துளி­கள்

2 mins read

 விக்ரம் தன் மகன் துருவ்வுடன் நடிக்கும் 'மகான்' படத்தின் பின்னணி குரல் பதிவு முடிந்துள்ளது. தாம் எதிர்பார்த்ததைவிட படம் நல்ல படைப்பாக உருவாகி உள்ளது என்கிறார் விக்ரம். 'மகான்' படத்தில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதற்கிடையே அடுத்து பா.ரஞ்சித் இயக்கத் தில் நடிக்கிறார் விக்ரம்.

 நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் ஒற்றைப் பாடலை விரைவில் வெளியிட உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பதும் விஜய் பாடியுள்ளார் என்பதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அநேகமாக அடுத்த வாரம் இப்பாடல் வெளியாகக்கூடும்.

 எட்டாம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து 'சங்கமித்ரா' என்ற சரித்திரப் படத்தை இயக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார் இயக்குநர் சுந்தர்.சி.

ஜெயம் ரவி, சூர்யா, ஷ்ருதிஹாசன் உள்ளிட் டோர் நடிப்பதாக இருந்தது. எனினும் பிறகு அப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அந்தப் படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளாராம் சுந்தர்.சி. முன்பு இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடியாக இருந்தது.

 வேல ராமமூர்த்தி எழுதிய நாவலை மையமாக வைத்து 'குற்றப்பரம்பரை' படத்தை இயக்கும் முயற்சியை தொடங்கி உள்ளார் சசிகுமார்.

இதற்கு முன்பு இதே கதையை படமாக்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா முயன்றார். இதுவே தமது வாழ்க்கை லட்சியம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பின்னர் பாலா இக்கதையை இயக்குவதாகக் கூறப்பட்டது. இப்போது சசி குமாரின் பெயர் அடிபடுகிறது. படத்தை இயக்குவதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் முடிவு செய்துள் ளாராம் சசி.

 வெங்கட் பிரபு சத்தமில்லா மல் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் அசோக் செல்வன்தான் கதாநாயகனாம்.