திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
f67126c2-24f8-49b6-bc91-4b1a30878fc5
-
multi-img1 of 2

 தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'ஷகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, 'யசோதா' படத்திலும் சாந்தரூபன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 'யசோதா' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்நிலையில் விவாகரத்து முடிவுக்குப் பின்னர் தம்மால் உயிரோடு இருக்கமுடியாது என்று கருதியதாகவும் தற்போது அந்த மனநிலையைக் கடந்து வரும் வலிமை தம்மிடம் இருப்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஓர் ஆச்சரியத் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, விஜய் மில்டன் இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தில்தான் 'கேப்டன்' நடிக்க உள்ளாராம். விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை அவரது வீட்டிலேயே படமாக்க விஜய் மில்டன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

 நடிகைகள் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேரும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளனர். எஸ்.எஸ்.பிரபு, சங்கர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூசை முடிவடைந்து, படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

வித்தியாசமான தோற்றத்தில் 'சார்பட்டா டாடி' ஜான் விஜய் நடிக்கிறார். கிரிதரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடித்துள்ள 'ராக்கி' படத்தை விக்னேஷ் சிவன், நயன்தாரா வின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் தனுஷ் இப்படக்குழுவினரைப் பாராட்டி உள்ளார். "இது மிகச் சிறந்த படம். திறமையான இயக்குநருக்கு எனது வாழ்த்துகள். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக அன்புக்குரிய பாரதிராஜா கலக்கி உள்ளார்," என்று தனுஷ் கூறியுள்ளார்.