இளையராஜா இசையில் முத்துச்சிற்பி

இளையராஜா இசையில் முத்துச்சிற்பி

1 mins read
a833dbf0-69d6-426a-bb1f-fe0fbdfe6914
-

விஜய் தொலைக்காட்சியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பாடி ரசிகர்களைக் கவர்ந்தவர் முத்துச்சிற்பி. அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த இசையமைப்பாளர்கள் அனிருத், 'ஹிப்ஹாப்' ஆதி ஆகியோர் அவருக்கு தாங்களும் வாய்ப்பு அளிக்கப்போவதாகக் கூறி இருந்தனர்.

இந்நிலையில், இளையராஜா இசையில் பாடி உள்ளார் முத்துச்சிற்பி. சீனு ராமசாமி இயக்கத்தில் அடுத்து வெளியாகும் 'மாமனிதன்' படத்தில்தான் அவரது முதல் திரைப்பாடல் இடம்பெற உள்ளது. இத்தகவலை தமது டுவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி. 'மாமனிதன்' படத்துக்கு இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.