மம்முட்டி நடிப்பில் உருவாகி உள்ள புதுப் படம் 'நண்பகல் நேரத்து மயக்கம்'. கேரளத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கியுள்ள படம் இது.
ரம்யா பாண்டியன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். இதுகுறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
"இயக்குநர் குழுவும் மம்முட்டி சாரும் 'ஜோக்கர்' படம் பார்த்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய நடிப்பு பிடித்துப்போனதால் வாய்ப்பு கிடைத்தது.
"தன்னுடைய ஒரு படத்திலாவது என்னை நடிக்க வைக்க விரும்பியதாக மம்முட்டி என்னிடம் கூறினார். ஆனால் முதலில் அந்த வாய்ப்பு அமையவில்லை. அதன் பிறகு அவரது குழு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துள்ளனர். அதன் பிறகு இந்த வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவு பெரிய நடிகர் மிகப் பணிவாக, எளிமையாக பழகு கிறார்," என்கிறார் ரம்யா.