திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
76363c0d-60f8-4aab-a9ae-db1d03f2c277
-
multi-img1 of 3

 தமது நட்பு வட்டத்தில் உள்ள நடிகைகளுக்கும் தாம் நடிக்கும் படங்களின் இயக்குநர் களிடம் வாய்ப்பு கேட்கிறாராம் அமலா பால் (படம்). இதற்காக கோடம்பாக்கத்தில் அவரைப் பலரும் பாராட்டுகிறார்கள்.

தற்போது 'கடாவர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அமலா, அப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்களில் அதுல்யா ரவி, ரித்விகா இருவரையும் நடிக்க வைக்க இயக்குநரிடம் கேட்டுக் கொண்டாராம். மேலும் இதற்கு முன்பேகூட சில நடிகைகளுக்கும் அவர் இவ்வாறு வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளார்.

 பிரபுதேவா நடிக்கவுள்ள 'மை டியர் பூதம்' படத்தின் முதல் பார்வை, சுவரொட்டியை படக்குழு வெளியிட்டது. இதில் அவர் பூதமாக நடிக்கிறார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்க, டி.இமான் இசையமைக் கிறார். இது முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகிறதாம். அநேகமாக அடுத்த ஆண்டு மத்தியில் இப்படம் வெளியீடு காணுமாம்.

 ரவீந்திரநாத் தாகூர் எழுதிய '3 வுமன்' நாவல் திரைப் படமாகிறது. அதில் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இஷிதா கங்குலி இயக்குகிறார். இந்நாவலில் இசை நாடகக் கலையை மைய மாக வைத்து, பெண் கதா பாத்திரங்களுக்கு முக்கியத்து வம் அளிக்கப் பட்டுள்ளது. மூன்று பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களில் இயக்குநர் கவனம் செலுத்தி உள்ளதாக இயக்குநர் கூறுகிறார். ஒரே சமயத்தில் இந்தி, ஆங்கிலம் என இருமொழிகளில் இப்படம் தயாராகிறது.

 அஜித் தனது படங்களின் வசூல் குறித்து கவலைப்பட மாட்டார். எனினும் தயாரிப்பாளருக்குப் பிரச்சினை என்று தெரிய வந்தால் மீண்டும் கால்ஷீட் கொடுத்து உதவுவார். இந்நிலையில் 'வலிமை' படத்துக்கு கூடுதல் சிறப்புக் காட்சி களுக்கு ஏற்பாடு செய்தால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்ற யோசனை முன் வைவைக்கப்பட்டபோது, அவர் மறுப்பு தெரிவிக்கவில்லையாம்.