'சிரித்துக்கொண்டே இருங்கள்'

'சிரித்துக்கொண்டே இருங்கள்'

3 mins read
cf99b509-6f95-445d-a96b-96446855d17e
நிக்கி கல்ராணி -

வாழ்க்­கையை ரசித்து அனு­ப­விக்க வேண்­டும் என்றும் எப்­போ­தும் புன்­ன­கை­யு­டன் வலம் வர வேண்­டும் என்­ப­து­தான் தன் கொள்கை என்­கி­றார் நிக்கி கல்­ராணி.

சுமார் இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் தமிழ் சினி­மா­வில் நல்ல வாய்ப்­பு­கள் தேடி­வரு­வ­தாக உற்­சா­கம் காட்­டு­ப­வர், சத்­த­மில்­லா­மல் சில சமூக சேவைப் பணி­க­ளி­லும் தம்மை ஈடு­ப­டுத்­திக் கொண்­டுள்­ளார்.

"எப்­போ­தும் சிரித்­துக்கொண்டே இருக்­கி­றீர்­களே என்று பல­ரும் என்­னி­டம் கேட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்­கான பதில், எனது இயல்பே அது­தான். வீட்­டி­லும் சரி, வெளி­யி­லும் சரி, என்னை சிரித்த முகத்­து­டன்­தான் உங்­க­ளால் பார்க்க முடி­யும். மற்­ற­வர்­களும் அப்­படி இருக்க வேண்­டும் என்­ப­து­தான் என்­னு­டைய சிறிய அறி­வுரை.

"சோக­மான காட்­சி­களில் நடித்த பிற­கும் நான் சிரிப்­ப­தைப் பார்த்து, உடன் நடித்­த­வர்­களே ஆச்சரி­ய­மா­கப் பார்த்த சம்­ப­வங்­களும் உண்டு.

என்­னைப் பொறுத்­த­வரை ஒரு காட்­சி­யில் நடிக்­கும்­போது நாம் ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ர­மாக மாறி­விட வேண்­டும். நடித்து முடித்த பின்­னர் நமது உண்­மை­யான இயல்­புக்கு திரும்­பி­விட வேண்­டும்.

"இப்­ப­டித்­தான் ஒரு­முறை படப்­பி­டிப்­பின்­போது முக்­கி­ய­மான காட்­சியை எடுத்­துக் கொண்­டி­ருந்­த­னர். நான் சற்றே நீள­மான வச­னத்­தைப் பேசி­ய­படியே அழவேண்­டும்.

"காட்சி பட­மாக்­கப்­பட்­ட­போது அழு­கை­யு­டன் வச­னம் பேசி­னேன். இயக்­கு­நர் 'கட்' என்­ற­தும் சிரித்­த­ப­டியே அங்­கி­ருந்த கேர­வ­னுக்­குச் சென்­று­விட்­டேன். ஆனால் படக்­கு­ழு­வி­ன­ருக்கு ஆச்­சரியம். அழுது அரற்­றி­ய­ப­டியே வச­னம் பேசி­ய­வர், சிரித்­த­படி செல்­கி­றாரே என்று யோசித்­தி­ருக்­கின்­ற­னர். இது­தான் எனது இயல்பு," என்­கி­றார் நிக்கி கல்ராணி.

உய­ரம் என்­றால் இவ­ருக்­குப் பய­மாம். அத­னால் உய­ரத்­தில் எடுக்­கப்­படும் காட்­சி­கள் என்­றால், இயக்­கு­ந­ரி­டம் பேசி வேறு இடத்­தில் அக்­காட்­சியை எடுக்க இய­லுமா? என்று கேட்­பா­ராம்.

இன்­றைய இளம் தலை­மு­றை­யி­னர் சமூக வலைத்­த­ளங்­கள்­தான் வாழ்க்கை என்று நினைத்­துக் கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அதற்­கும் அப்­பால் ஏரா­ள­மான விஷ­யங்­கள் உள்­ளன என்பதை இளை­யர்­கள் உணர வேண்­டும் என்­கி­றார்.

சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் தங்­க­ளைப் பற்­றிய அனைத்­தை­யும் பகிர்ந்து கொள்­கி­றார்­கள் என்­றும் இதில் தமக்கு உடன்­பா­டில்லை என்­றும் சொல்­கி­றார்.

"என் வாழ்க்கை குறித்து மற்­ற­வர்­க­ளுக்கு என்­னென்ன தெரி­ய­லாம் என்ற வரை­ய­றையை வகுத்­துள்­ளேன். ரசி­கர்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­பது எவ்­வ­ளவு முக்­கி­யமோ, அதை­விட நம் வாழ்க்­கை­யு­டன் நாம் கொண்­டி­ருக்­கும் தொடர்பு முக்­கி­ய­மா­னது.

"சமூக வலைத்­த­ளங்­கள் இன்று நம் வாழ்க்­கை­யின் ஓர் அங்­க­மா­கி­விட்­டன. இதை மறுப்­ப­தற்கு இல்லை. பல ஆண்­டு­களுக்கு முன்பு, தங்­கள் அபி­மான நடி­கர், நடி­கை­களை ரசி­கர்­க­ளால் திரை­யில் மட்டுமே காண முடிந்­தது. இப்­போது நிலைமை மாறி­விட்­டது.

"அதற்­காக எல்­லாமே சமூக வலைத்­த­ளங்­களை நம்­பித்­தான் நடக்க வேண்­டும் என்ற நிலை­யும் இல்லை. சுருக்­க­மா­கச் சொன்­னால் நான் சமூக ஊட­கங்­களை நம்பி வாழவில்லை," என்கி­றார் நிக்கி கல்­ராணி.

ஓடிடி தளங்­கள் குறித்து பல­வி­த­மான கருத்­து­கள் உலா வரும் நிலை­யில், இந்த தொழில்­நுட்ப வளர்ச்சி தேவை என்­ப­து­தான் நிக்­கி­யின் கருத்து.

"ஓடிடி தளங்­கள் மூலம் பலருக்கு வாய்ப்­பு­கள் கிடைக்­கும். என்­னைப் போன்­ற­வர்­கள் மேலும் பல விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள முடி­யும்.

"அதா­வது, பல்­வேறு திற­மை­களைக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் தங்­களை மேலும் கூர்­தீட்­டிக்­கொள்ள, ஓடிடி தளங்­கள் கூடு­த­லாக வாய்ப்பு­ க­ளைத் தரும் என நம்­பு­கி­றேன்," என்று சொல்­லும் நிக்கி கல்­ராணி, வாய்ப்பு கிடைத்­தால், நல்ல கதை­கள், கதாபாத்திரங்கள் அமைந்­தால் இணை­யத் தொடர்­களில் நடிக்கத் ­த­யாராக இருப்பதாக கூறுகிறார்.