அண்மைக்காலமாக தமிழில் தரமற்ற வகையில் சில படங்கள் தயாரிக்கப்படுவதாக இயக்குநர் பாக்யராஜ் சாடி உள்ளார்.
இதுபோன்ற படங்களைப் பொதுமக்கள் ஆதரிக்கக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல ஆபாசமான, மோசமான படங்களுக்கு எதிராக தாம் பொதுநல வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரி வித்த அவர், இதுபோன்ற திரைப் படங்கள் சில நாள்கள் திரையரங்கில் தாக்குப் பிடித்தாலும் கூட, ரசிகர்கள் விரும்புவதாகப் பழிபோட்டு மேலும் பல படங்கள் இதேபோல் வெளியாகும் என்றார்.
அவரை இந்த அளவு கோபப்பட வைத்த படங்களின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஒரு புதுப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

