திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

1 mins read
723a099e-0cb6-4306-aaae-b1fd765f0fea
-

 மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பஹத் பாசில் நடிக்கும் படம் 'ஷெர்லக்'. இதில் பஹத்தின் அக்கா வேடத்தில் நடிக்க நதியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்னர் பஹத்தின் தந்தை பாசிலின் படம் மூலம்தான் திரையுலகில் அறிமுகமானார் நதியா. இப்போது அவரது மகனுடன் இணைந்து நடிக்கிறார்.

 கீர்த்தி சுரேஷை ஒருவர் ஆபாச வார்த்தைகளைக் கொண்டு திட்டுவது போன்ற காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், அந்தக் காணொளியை கீர்த்தியின் தந்தைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது அறிவுறுத்தலின்படி இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார் கீர்த்தியின் தந்தை.

 அண்மையில் ஒரு பட விழாவில் தாம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்க்கிறாராம் அஷ்வின். இரு தினங்களுக்கு முன்னர் அவர் இயக்குநர் சங்கத்துக்கு நேரில் சென்று, வெளிப்படையாக மன்னிப்பு கேட்பார் என்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.

 சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடிப்பதால் உற்சாகத்தில் உள்ளாராம் வடிவேலு.

இதற்கிடையே, இப்படத்தின் முதல் சுவரொட்டியும் நேற்று முன்தினம் வெளியானது. இதற்கு சமூக வலைத் தளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம்.