'பீஸ்ட்' குழுவிடம் விடைபெற்றார் பூஜா

'பீஸ்ட்' குழுவிடம் விடைபெற்றார் பூஜா

1 mins read
a99310fb-14bb-4de7-9078-0327b839f6ca
-

'பீஸ்ட்' படத்­தின் இறு­திக்­கட்ட படப்­பிடிப்பு நடை­பெற்று வரு­கிறது. இந்­நிலை­யில், அப்­ப­டத்­தில் தனக்­கான காட்­சி­களை முடித்­துக் கொடுத்­துள்­ளார் நாயகி பூஜா ஹெக்டே.

இது­கு­றித்து இன்ஸ்­ட­கி­ரா­மில் காணொளி ஒன்றை அவர் பதி­விட்­டுள்­ளார். அதில் 'பீஸ்ட்' படக்­கு­ழு­வி­ன­ரி­டம் இருந்து தாம் விடைபெற்­ற­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்­தப் படம் அனை­வ­ரும் ரசிக்­கத்­தக்க வகை­யில் உரு­வாகி வரு­கிறது. விஜய் பாணி, இயக்­கு­நர் நெல்­சன் பாணி என இரண்­டும் இப்­படத்­தில் உள்­ளன. ஒவ்­வொரு காட்­சி­யி­லும் ரசித்து நடித்­தேன்.

"இப்­ப­டிப்­பட்ட படக்­கு­ழு­வு­டன் இணைந்து பணி­யாற்­றி­யதைப் பெரு­மை­யா­கக் கரு­து­கி­றேன். மிக விரைவாக படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கவில்லை. அதனால் படக் குழுவை பிரிவது வருத்தம் தருகிறது," என்று பூஜா தெரி­வித்­துள்­ளார்.

தனிப்­பட்ட வகை­யில் இந்­தப் படத்­தில் நடித்­தது மிக இனிய அனு­ப­வ­மாக இருந்­தது என்­றும் கூறி­யுள்­ளார்.

விஜய்­யு­டன் ஜோடி சேர்ந்­தி­ருப்­ப­தால் தென்­னிந்­திய சினி­மா­வில் தனக்­கான இடத்தை வலு­வாக தக்கவைக்க முடி­யும் என்று நம்­பு­வ­தா­க­வும் தொடர்ந்து இது­போன்ற நல்ல வாய்ப்­பு­கள் அமை­யும் என நம்­பு­வ­தா­க­வும் சொல்­கிறார்.

'பீஸ்ட்' படத்­தில் விஜய்­யு­டன் இணைந்து நட­ன­மா­டி­ய­தும் மறக்க முடி­யாத அனு­ப­வம் என்­கி­றார் பூஜா.

இந்தப் படம் வெற்றிபெற்றால் இவரது சம்பளம் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.