போயஸ் தோட்டம்: பெயர் வந்தது எப்படி?

போயஸ் தோட்டம்: பெயர் வந்தது எப்படி?

1 mins read

1830களில் சென்னை வந்த ஆங்­கி­லேய வர்த்­த­கர் 'போய்' என்­பவர் அங்­குள்ள கதீட்­ரல் சாலைக்­கும் எல்­டாம்ஸ் சாலைக்­கும் இடைப்­பட்ட பகு­தி­யில் தேனாம்­பேட்டை, ஆழ்­வார்­பேட்­டை­யு­டன் எல்­லைத் தொடர்பு கொண்ட பகு­தி­யில் பங்­களா போன்ற ஒரு பெரிய வீடு கட்டி வசித்­தி­ருக்­கி­றார்.

இயற்­கை­யோடு இழைந்து வாழும் வித­மாக, மரம் செடி கொடி­க­ளுக்கு மத்­தி­யில் வசித்­த­தால் 'போய் கார்­டன்' என்று அப்­ப­குதி அழைக்­கப்­பட்­டது. பின்­னர் அது 'போயிஸோட கார்­டன்' (Poe's Garden) என்­ப­தைக் குறிக்­கும் வகையில் 'போய­ஸிஸ் கார்­டன்' என்ற பெய­ரில் அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறது. நாள­டை­வில் அந்­தச் சொல் மருவி, 'போயஸ் கார்­டன்' என்­றா­னது. இது­தான் போயஸ் கார்­ட­னின் வர­லாறு என சென்னை குறித்த சில ஆவ­ணங்­களில் சொல்­லப்­பட்­டி­ருப்­பதாக அப்­ப­கு­தி­யின் மூத்த குடி­மக்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.