விபத்தில் உதவிய நெஞ்சங்களுக்கு நன்றி

விபத்தில் உதவிய நெஞ்சங்களுக்கு நன்றி

1 mins read
cf79dad1-127f-486b-a010-5f282be8a384
-

மகாபலிபுரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த விருந்து ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் திரும்பிய நடிகை யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

அந்தப் பகுதி மக்கள் அவரை காரில் இருந்து வெளியே இழுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய மக்களை யாஷிகா நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.