சமந்தாவின் குத்து நடனத்திற்கு எதிர்ப்பு

சமந்தாவின் குத்து நடனத்திற்கு எதிர்ப்பு

3 mins read
990fd48a-fa43-4cb6-9597-8f5e7c75b66f
-

கோலி­வுட், டோலி­வுட் என இரு­மொழிப்

படங்களி­லும் அசத்திவரும் நடி­கை­க­ளுள் சமந்தா முதன்­மை­யா­ன­வர். இவர் அண்­மை­யில் 'புஷ்பா' படத்­திற்காக நட­னம் ஒன்றை ஆடி­யி­ருக்­கி­றார். அந்த நட­னத்­தைப்

படத்­தி­லி­ருந்து நீக்­க­வேண்­டும் என்று நீதி­மன்­றத்­தில் வழக்கு பதிவு செய்­தி­ருக்­கின்­ற­னர்.

சமந்தா முன்­னணி நாய­கி­யாக பல படங்­களில் நடித்­துக்­கொண்டு இருக்­கும்­போது அல்லு அர்­ஜுன், ராஷ்­மிகா மந்­தனா நடித்­தி­ருக்­கும் 'புஷ்பா' படத்­தில் ஒரு பாட­லுக்கு குத்து நட­னம் ஆட சம்­ம­தித்­தார். அதற்கு அவ­ருக்கு 1.5 கோடி ரூபாய் சம்­ப­ளம் பேசபட்டதாக செய்­தி­கள் வெளி­வந்­தன.

நட­னத்­திற்­கான படப்­பி­டிப்­பும் முடி­வ­டைந்த நிலை­யில் பாட­லில் வரும் சில காட்சி

களை­யும் படத்­தின் வரி­க­ளை­யும் அண்­மை­யில் காணொ­ளி­யாக வெளி­யிட்டு இருந்­தது படக்­குழு. அந்­தக் காணொளி இணை­யத்­தில் பல­ரா­லும் பார்க்­கப்­பட்டு பகி­ரப்­பட்டு வருகிறது.

இந்­நி­லை­யில் இந்­தப் பாட­லுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த ஆண்­கள் சங்­கத்­தி­னர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்து உள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

இந்­தப் பாடல் ஆண்­களைத் தவ­றான கண்­ணோட்­டத்­தில் சித்­தி­ரித்து எழு­தப்­பட்டு இருப் ­ப­தா­க­வும் அத­னால் இந்­தப் பாடலைப் படத்திலிருந்து நீக்­க­வேண்­டும் என்றும்

ஆந்­திர நீதி­மன்­றத்­தில் வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளதாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இந்­தப்­ப­டம் வரு­கின்ற 17ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி வர உள்ளது.

தென்­னிந்­தியத் திரை­யு­ல­கி­லேயே ஒரு பாட­லுக்கு நட­ன­மாட அதிக சம்­ப­ளம் கொடுக்­கப்­பட்­டது சமந்­தா­விற்குத் தான் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ­ரைப்­போல சில நடி­கை­களும் பல படங்­களில் ஒரு பாட­லுக்கு நட­னம் ஆடி­யுள்­ள­னர். அந்த வகை­யில் சூர்யா நடிப்­பில் வெளி­யான 'சிங்­கம்-2' படத்­தில் ஒரு குத்­துப் பாட்­டிற்கு நடிகை அஞ்­சலி நட­ன­மா­டி­யுள்­ளார்.

'ஷாஜ­கான்' படத்­தில் விஜய்­யு­டன் நடிகை மீனா­வும் 'யூத்' படத்­தில் விஜய்­யு­டன் நடிகை சிம்­ர­னும் 'நெஞ்­சி­னிலே' படத்­தில் விஜய்­

யு­டன் நடிகை ரோஜா­வும் 'எதிர்­நீச்­சல்' படத்­தில் தனு­ஷு­டன் நயன்தாராவும் ஒரு குத்­துப் பாட­லுக்கு நட­ன­மா­டி­யுள்­ள­னர்.

இதற்­கி­டை­யில் இந்­தப் படத்­தின் நாய­கன் அல்லு அர்­ஜுன், புஷ்பா படக்­கு­ழு­வி­ன­ருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து இருக்­கி­றார்.

கொவிட்-19 கால­கட்­டத்­தில் குறைந்த ஆட்­களை வைத்­துக்­கொண்டு படப்­பி­டிப்பு நடத்­திய படக்­கு­ழு­வி­னர் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் அவர்­க­ளின் கடின உழைப்­பைப் பாராட்­டும் வகை­யில் தலா ஒரு துலாம்

அதா­வது 11.66 கிராம் மதிப்­புள்ள தங்க நாண­யத்தைப் பரி­சாக அளித்­துள்­ளார்.

அது­மட்­டு­மின்றி, அனைத்து

தயா­ரிப்புப் பணி­யா­ளர்­க­ளுக்­கும்

ரூ. 10 லட்­சம் ரொக்கப் பரி­சாக வழங்­கி­யுள்­ளார்.

அல்லு அர்­ஜு­னின் இந்­தச் செயல், 'புஷ்பா' படக்­கு­ழு­வி­னரை மட்­டு­மின்றி அவ­ரது ரசி­கர்­கள், பொது­மக்­கள் ஆகி­யோ­ரின் பாராட்­டு­க­ளையும் பெற்று வருகிறது.

இந்தப் படத்­தில் பகத் பாசில், சுனில், அன­சுயா பரத்­வாஜ் மற்­றும் அஜய் கோஷ் ஆகி­யோ­ர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து­உள்­ள­னர்.

அண்­மை­யில் வெளி­யீடு கண்ட இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்சியும் படத்­தில் ராஷ்­மிகா

மந்­தனா குழு­வி­ன­ரு­டன் நட­ன­மா­டும் 'சாமி சாமி' பாடலும் பட்டி தொட்­டி­யெங்­கும் விரும்­பிக் கேட்­கப்­பட்டு ரசி­கர்­க­ளி­டையே அதி­கம் வர­வேற்­பைப் பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம், இந்தி ஆகிய மொழி­களில் உரு­வா­கி­யுள்ள 'புஷ்பா தி ரைஸ்', இந்த ஆண்­டில் மிக­வும் எதிர்­பார்க்­கப்­படும் திரைப்

­ப­டங்­களில் ஒன்­றா­கும்.

இந்­தப் படத்­தின் இயக்­கு­நர் சுகு­மார், சமந்­தாவிற்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்த 'ரங்­கஸ்­த­லம்' என்ற படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.