திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

1 mins read

'மாநாடு' படத்தின் வெற்றி, 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு என வேலை செய்து கொண்டிருந்த சிம்புவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்தனர். ஆனால் அவருக்கு அந்தத் தொற்று இல்லை என்றும் சாதாரண காய்ச்சல்தான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பியதாக தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் "நான் குணமாகவேண்டும் என்று பிராத்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றும் பதிவிட்டிருந்தார்.

இவர் 'பத்து தல', 'மஹா', 'கொரோனா குமார்' படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் தனது 72வது பிறந்த நாளையொட்டி வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த 'டி.என்.பி.எஸ்.சி' தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்குத் தனது பிறந்தநாள் பரிசு ஒன்றை அறிவித்துள்ளார். சமூகத்தில் வசதி குறைந்த, பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'டி.என்.பி.எஸ்.சி' தேர்வுக்கு தயாராகும் வகையில் பயிற்சி வழங்க உள்ளார். இதற்காக ரஜினிகாந்த் 'பவுண்டேஷன்' என்ற பயிற்சி அமைப்பையும் தொடங்கியுள்ள ரஜினிகாந்த், இந்த நிறுவனத்திற்கு நிர்வாகிகளாக வழக்கறிஞர் சத்தியக்குமார், எம்.சூர்யா ஆகியோரை நியமித்துள்ளார்.