திரைத்துறையில் நடிப்புடன் தயாரிப்புத் துறையிலும் பயணித்து வந்த நடிகை நயன்தாரா, தற்போது அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபடத் துவங்கி உள்ளார். இதற்காக அவர், 'தி லிப் பாம்' நிறுவனத்துடன் இணைந்து உள்ளார்.
இதுகுறித்து, நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், தான் பயன்படுத்தும் சருமப் பராமரிப்பு பொருட்களின் சிறப்பான செயல்திறன், உயர் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில், இந்நிறுவனத்துடன் அவர் கைகோத்து உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்குமுன், கீர்த்தி சுரேஷ் இயற்கை அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் சமந்தா, காஜல் உள்ளிட்டோர் ஹோட்டல், ஜவுளி உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்து உள்ளார்.

