நித்யா: அதை இன்னும் மறக்கவில்லை

நித்யா: அதை இன்னும் மறக்கவில்லை

1 mins read
85b3b81c-7c5e-4a31-8a57-b7eb17a8778b
-

உண்­மை­யைப் பேசி­ய­தற்­காக கடும் விமர்­ச­னங்­க­ளை­யும் எதிர்ப்­பை­யும் எதிர்­கொண்­ட­தாக நடிகை நித்யா மேனன் தெரி­வித்­துள்­ளார்.

பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு தெலுங்கில் அறி­மு­க­மா­ன­போது நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில், நடி­கர் பிர­பாஸ் குறித்து இவ­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­ட­தாம். அதற்கு, அவர் யார் என்று தமக்­குத் தெரி­யாது எனப் பதி­ல் அளித்­துள்­ளார் நித்யா.

"இதை வைத்து சிலர் சர்ச்­சை­யைக் கிளப்­பி­னர். நான் அப்­போ­து­தான் திரைத்­து­றைக்கு வந்தி­ருந்­தேன். உண்­மை­யா­கவே பிர­பாஸ் யார் என்று அப்­போது எனக்­குத் தெரி­யாது. ஆனால் ரசி­கர்­கள் விமர்­சித்­த­னர்.

"பத்து ஆண்­டு­கள் கடந்­து­விட்ட பிற­கும் அந்த நிகழ்வை மறக்க முடி­ய­வில்லை. அது என் மன­தைக் காயப்­ப­டுத்­தி­யது.எனக்கு முத­லி­டத்­தைப் பிடிக்­கும் ஆசை எல்­லாம் இல்லை," என்று நித்யா மேனன் தெரி­வித்­துள்­ளார்.

, :

  