ஹைதராபாத் செல்லும் 'லத்தி' படக்குழு

ஹைதராபாத் செல்லும் 'லத்தி' படக்குழு

1 mins read

விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'லத்தி' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இத்தகவலை விஷால் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'அயோக்யா' திரைப்படத்திற்குப் பிறகு விஷால் மீண்டும் காவல்துறை ஊழியராக நடித்துள்ள படம் இது.

அறிமுக இயக்குநர் ஏ.வினோத் குமார் இயக்கியுள்ளார். சுனைனா கதாநாயகியாக நடிக்க, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

அடுத்தகட்ட படப்படிப்புக்காக படக்குழு விரைவில் ஹைதராபாத் செல்கிறது. அங்கு நாற்பது நாள்கள் காட்சிகள் படமாக்கப்படுமாம். முக்கிய சண்டைக்காட்சிகளை எடுக்க இருப்பதாகத் தகவல்.