நடிப்பில் அசத்திய நாயகிகள்

நடிப்பில் அசத்திய நாயகிகள்

3 mins read
8036f0e7-c309-4dc0-bedd-eb0532e7320b
-

இளை­யர்­கள் மத்­தி­யில் பெரும் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது 'என்ன சொல்­லப் போகி­றாய்' திரைப்­ப­டம்.

அஸ்­வின், தேஜு அஸ்­வினி, புகழ், அவந்­திகா உள்­ளிட்­டோர் நடித்­துள்ள இப்­ப­டத்தை ஹரி­ஹ­ரன் இயக்கி உள்­ளார். இணை­யத் தொடர்­கள் மூலம் இளம் ரசி­கர்­களை தன் பக்­கம் திரும்­பிப்­பார்க்க வைத்­த­வர் இவர்.

இது ஏழு ஆண்­டு­க­ளுக்கு முன்பு எழு­திய கதை­யாம். காதல், உற­வு­கள் குறித்து பேசு­வ­தி­லும் அது தொடர்­பான கதை­களை உரு­வாக்­க­வும் தமக்கு ரொம்­பப் பிடிக்­கும் என்று சொல்­ப­வர், இது முழு­மை­யான இளமை ததும்­பும் காதல் கதை என்­கி­றார்.

"உல­கம் முழு­வ­தும் காதல் கதை­க­ளைச் சொல்­வ­தற்கு சில வழி­மு­றை­கள்­தான் உள்­ளன. அவற்­று­டன் நாம் வேறு எந்த மாதி­ரி­யான சுவா­ர­சி­யம் தரக்­கூ­டிய அம்­சங்­களை சேர்க்­கி­றோம் என்­ப­தில்­தான் வெற்றி அமைந்­துள்­ளது.

"மனதை நெரு­டாத நகைச்­சுவை­யு­டன் இளை­யர்­களை மன­தில் வைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள படம் இது.

"படத்­தைப் பார்த்த பிறகு நமக்­கும் இப்­ப­டி­யொரு காதல் அமைய வேண்­டும் என்று நிச்­ச­யம் நினைக்­கத் தோன்­றும்," என்­கி­றார் இயக்­கு­நர் ஹரி­ஹ­ரன்.

கதை நாய­க­னாக அஷ்­வினை தேர்வு செய்ய தாம் சிறி­தும் தயங்­க­வில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், அஷ்­வி­னுக்கு என்று தனி ரசி­கர் கூட்­டம் இருப்­பது தமக்கு கூடு­தல் தெம்­ப­ளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"ஒரு படத்­துக்­கான பணி­க­ளைத் தொடங்­கும்­போதே, கதைக்­குத் தேவை­யான அனைத்­தை­யும் தீர்­மா­னித்­து­விட வேண்­டும். நல்ல கதை­கள் தனக்கு தேவை­யா­ன­வற்றை தானாக தேர்ந்­தெ­டுத்­து­வி­டும் என்­பார்­கள். அப்­ப­டித்­தான் இந்­தக் கதைக்­குத் தேவை­யான கதா­நாயகனில் தொடங்கி தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் வரை எல்­லாம் தன்­னால் அமைந்­தது.

"அஷ்­வி­னைப் பொருத்­த­வரை ஏற்­கெ­னவே தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­கள் மூலம் அனைத்து குடும்­பங்­க­ளை­யும் சென்­ற­டைந்­து­விட்­டார். மேலும், என் கதைக்­கான நாய­க­னாக கச்­சி­த­மா­கப் பொருந்தி இருந்­தார். அர்ப்­ப­ணிப்­பு­டன் வேலை பார்க்­கக் கூடி­ய­வர் என்­பதை இணைந்து பணி­யாற்­றி­ய­போதே தெரிந்து கொண்­டேன்.

"அஷ்­வி­னுக்கு என்று ரசி­கை­கள் கூட்­டம் உள்­ளது. அவர்­கள் அனை­வ­ருமே இந்­தப் படத்தை நிச்­ச­யம் பாராட்­டு­வார்­கள் என நம்பு­கி­றேன்," என்­கி­றார் ஹரி­ஹ­ரன்.

தேஜு, அவந்­திகா என இரண்டு நாய­கி­கள் நடித்­துள்ள இப்­ப­டத்­தில் நடி­கர் புகழ் நகைச்­சு­வைப் பகு­திக்­குப் பொறுப்­பேற்­றுள்­ளார். அவர் திரை­யில் தோன்­றும் காட்­சி­கள் ரசி­கர்­க­ளின் வயிற்­றைப் பதம் பார்க்­கும் வகை­யில் இருக்­கு­மாம்.

"உண்­மை­யில் பட வேலை­க­ளைத் தொடங்­கி­ய­தும், முத­லில் அவந்­தி­கா­தான் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டார். அவ­ரைப் பார்த்த நிமி­டமே, குறிப்­பிட்ட கதா­பாத்­தி­ரத்­துக்கு அவர்­தான் பொருத்­த­மாக இருப்­பார் என்று உள்­ம­ன­தில் தோன்­றி­யது. அடுத்து தேஜு ஒப்­பந்­த­மா­னார். இரு­வ­ருமே ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ற நடிப்பை வழங்கி உள்­ள­னர்.

"பொது­வாக காதல் கதை­க­ளுக்­குப் புது­மு­கங்­களை தேர்வு செய்­வது நல்­லது. கார­ணம், புது­முகங்­களை வைத்து கதை சொல்­லும்­போது, ரசி­கர்­கள் கூடு­தல் ஆர்­வத்­து­டன் கவ­னிப்­பார்­கள். மேலும், இது­வரை இணைந்து நடித்­தி­ராத இணை என்­றால் ரசி­கர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான மன நெரு­ட­லும் ஏற்­ப­டாது.

"அந்த வகை­யில் எனது இரு நாய­கி­க­ளுமே இந்­தப் படத்­தில்­தான் அறி­மு­க­மா­கி­றார்­கள். ஆனால் முதல் படம் என்று தீர்­மா­னிக்க இய­லாத வக­யில் மிகச் சிறப்­பாக நடித்­துள்­ள­னர்," என்­கி­றார் ஹரி­ஹ­ரன்.

'ஆசை...', 'கியூட் பொண்ணு...' என இந்­தப் படத்­தில் இடம்­பெற்­றுள்ள பாடல்­களுக்கு இளை­யர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. மெர்­வின் இசை­யில் இந்­தப் பாடல்­களை எழு­தி­ய­வர் விவேக்.

"இந்த இரு­வ­ரது கூட்­டணி பல்­வேறு அதி­ச­யங்­களை நிகழ்த்­தும். படத்­தில் இடம்­பெற்­றுள்ள மற்ற பாடல்­களும் அரு­மை­யாக உள்­ளன. பின்­னணி இசை­யும் ரசிக்க வைக்­கும். படத்­தில் ஒரு கதா­பாத்­தி­ரம் சொல்­லத்­தக்க வகை­யில் அசத்தி உள்­ளார் மெர்­வின்.

"பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு வெளி­யான 'டைட்­டா­னிக்' படத்­தில்­கூட, 'நான் உன்­னைக் காத­லிக்­கி­றேன்' என்­று­தான் காதலை வெளிப்­ப­டுத்தி உள்­ள­னர்.

"வித்­தி­யா­ச­மான காதல் கதை என்­பதே இல்லை. காத­லைச் சொல்­லும் தரு­ணம்­தான் மாறு­படும். அது­தான் மிக­வும் முக்­கி­யம். காதலை வேறு­ப­டுத்­திக் காட்­டு­வ­தும் அந்­தத் தரு­ணம்­தான்.

"இந்­தப் படத்­தில் நீங்­கள் காணப்­போ­கும் அந்­தத் தரு­ணம் நிச்­ச­யம் ஆழ்­ம­ன­தில் ஒரு­வித சிலிர்ப்பை உண்­டாக்­கும்.

"மிக விரை­வில் இசை வெளி­யீட்டு விழா­வுக்கு திட்­ட­மிட்­டுள்­ளோம். அப்­போது மற்ற பாடல்­க­ளை­யும் கேட்க முடி­யும்," என்­கி­றார் ஹரி­ஹ­ரன்.

படம்: தேஜு அஸ்வினி.