'வலிமை' படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய காணொளி அஜித் ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது.
இப்படத்துக்கான சண்டைக் காட்சிகளை எவ்வாறு படம்பிடித்துள்ளனர் என்பதை விவரிக்கும் வகையில் இந்தக் காணொளி அமைந்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கியபோது, இருசக்கர வாகனத்தில் வரும் அஜித், எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார்.
எனினும், பின்னர் சுதாரித்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்து முடித்துள்ளார்.
இதை புதிய காணொளியில் பதிவு செய்துள்ளனர். அஜித்தின் இந்த விடாமுயற்சியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்த காணொளி இணையத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களுக்குள் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அந்த வகையில் இந்தக் காணொளி புதிய சாதனை படைக்கும் என அஜித் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும், இதை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்தும் வருகின்றனர்.

