தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓடிடியில் வெளியாகிறது 'அன்பறிவு'

1 mins read
a9e7b004-b650-4191-a47c-3094f761d442
-

'ஹிப்­ஹாப்' தமிழா ஆதி நடித்­துள்ள புதிய திரைப்­ப­டம் 'அன்­ப­றிவு'. அறி­முக இயக்­கு­நர் அஸ்­வின் ராம் இயக்­கி­யுள்­ளார்.

எதிர்­வ­ரும் ஜன­வரி 7ஆம் தேதி இப்­படத்தை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யிட உள்­ள­னர்.

முன்­னணி ஓடிடி தளத்­தில் வெளி­யா­கும் இப்­ப­டத்­தில் முதன்­மு­றை­யாக இரட்டை வேடங்­களில் நடித்­துள்­ளார் ஆதி.

"மது­ரை­யைச் சேர்ந்த ஒரு குடும்­பத்­தில் மூன்று தலை­மு­றை­யைச் சேர்ந்­த­வர்­கள் பாசப்­பி­ணைப்­பு­டன் வாழ்ந்து வரு­கி­றார்­கள். அந்­தக் குடும்­பத்­தில் நடக்­கும் நிகழ்­வு­களை காட்­சிப்­ப­டுத்தி உள்­ளோம்.

"இரட்டை வேடங்­களில் அசத்­த­லாக நடித்­துள்­ளார் ஆதி. அனு­ப­வம் வாய்ந்த நடி­கர்­கள் நடிக்கவேண்­டிய பாத்­தி­ரங்­களில் ரசிக்­கும் வகை­யில் அவர் நடித்­தி­ருப்­பது பாராட்­டுக்­கு­ரி­யது.

"ஆதி­யின் தாத்­தா­வாக நெப்­போ­லி­யனும் தந்­தை­யாக சசி­கு­மா­ரும் நடித்­துள்­ள­னர். இந்­தப் படம் ரசி­கர்­களை சிரிக்­க­வும் சிந்திக்­க­வும் வைக்­கும்," என்­கி­றார் இயக்குநர் அஸ்­வின் ராம்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விதார்த், காஷ்மீரா பரதேசி, சசிகுமார், ஆஷா சரத், தீனா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.