மறக்க முடியாத 19 ஆண்டுகள்

மறக்க முடியாத 19 ஆண்டுகள்

2 mins read
171ee854-510b-4e6a-bb6c-2782e98adc90
-

"திரை­யு­ல­கில் நாய­கி­யாக அறி­மு­க­மாகி 19 ஆண்­டு­கள் உருண்­டோ­டி­விட்­டதை நம்­பவே முடி­ய­வில்லை," என்­கி­றார் திரிஷா.

கடந்த 1999ஆம் ஆண்­டில் 'மிஸ் சென்னை' அழ­கிப் போட்­டி­யில் வாகை சூடி­ய­வர், அதே ஆண்டு வெளி­யான 'ஜோடி' படத்­தில் ஒரு சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் தோன்­றி­னார்.

அதன் பிறகு இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பெரி­தாக எந்த வாய்ப்பு அமை­ய­வில்லை. பின்­னர் 2002ஆம் ஆண்டு வெளி­யான 'மௌனம் பேசி­யதே' படத்­தின் மூலம் நாய­கி­யாக அறி­மு­க­மா­னார்.

அதன் பிறகு திரி­ஷா­வின் திரைப்­பயணத்­தில் அவர் எட்­டிப்­பி­டிக்க உய­ரங்­கள் மட்­டுமே காத்­தி­ருந்­தன. பல வெற்­றிப்­ப­டங்­களில் நடித்­த­தால் வெகு விரை­வில் முதல்­நிலை நாய­கி­யாக உரு­வெ­டுத்­தார்.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்­ரம், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, விஷால், தனுஷ், சிம்பு, விஜய் சேது­பதி என அனைத்து முன்­ன­ணிக் கதா­நா­ய­கர்­க­ளு­டன் இணைந்து நடித்­துள்­ளார் திரிஷா. இப்­போது அதிக வாய்ப்­பு­கள் கிடைக்­கா­விட்­டா­லும், தென்­னிந்­திய திரை­யு­ல­கில் இவ­ரது மதிப்பு குறைந்­து­வி­ட­வில்லை. இப்­போ­தும் கூட நாய­கியை முன்­னி­லைப்­படுத்­தும் படங்­க­ளுக்கு இவ­ரது பெயர் பரிசீலிக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ரசி­கர்­க­ளின் அன்­பும் தனது நல­னில் அக்­கறை கொண்­ட­வர்­க­ளின் பாச­மும்­தான் தம்மை உய­ரங்­க­ளைத் தொட வைத்­த­தா­கச் சொல்­கி­றார் திரிஷா.

திரை­யு­ல­கில் 19 ஆண்­டு­களை நிறைவு செய்­தது தொடர்­பாக தமது டுவிட்­டர் பக்­கத்­தில் உருக்­க­மாக ஒரு பதிவை வெளி­யிட்­டுள்­ளார்.

"உங்­க­ளுக்கு விடு­முறை தேவைப்­படாத ஒரு வேலை­யைப் பெறுங்­கள் என்று ஆங்­கி­லத்­தில் கூறு­வார்­கள். உண்­மை­யில் நான் அதைத்­தான் செய்­தேன். நான் இன்­னும் விடு­முறை­யில்­தான் இருக்­கி­றேன்.

"இந்­தப் பய­ணத்­தில் என்­னோடு இருப்­ப­வர்­களை எப்­போ­தும் வில­கிச்­செல்ல விட­மாட்­டேன். உங்­கள் அனை­வ­ரா­லும்­தான் நான் இந்த இடத்­தில் இருக்­கி­றேன். என்­னு­டைய வாழ்க்­கை­யின் மிகச்­சிறந்த 19 ஆண்­டு­களுக்கு நன்றி சொல்ல வார்த்­தை­கள் இல்லை," என்று திரிஷா தமது டுவிட்­ட­ர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

திரிஷா நடித்­துள்ள 'சது­ரங்க வேட்டை 2', 'கர்­ஜனை' உள்­ளிட்ட படங்­கள் சில கார­ணங்­க­ளால் வெளி­யீடு காண­வில்லை.

அந்­தப் படங்­கள் வெளி­யா­ன­தும் பல நல்ல வாய்ப்­பு­கள் தம்­மைத் தேடி­வ­ரும் என நம்­பு­வ­தாகச் சொல்­கி­றார் திரிஷா.

, :   

திரிஷா