திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
857be4cb-dc48-4c79-88d8-4057d9b01099
-
multi-img1 of 3

 சாலை விபத்தில் சிக்கிய யாஷிகா, அதன்பிறகு புதுப் படங்களில் நடிக்கவில்லை. எனினும், அவர் முன்பே நடித்த 'ஆர் 23: க்ரிமினல்ஸ் டைரி' என்ற படம் மூன்று மொழிகளில் தற்போது வெளியாகிறது.

"இந்தப் படத்தின் தலைப்பைப் போலவே திரைக்கதையும் மிகவும் வித்தியாசமானது. படம் பார்ப்பவர்கள் ஒரு நிமிடத்தை தவறவிட்டாலும் கதை புரியாமல் போக வாய்ப்புண்டு. இந்த ஒரு காரணத்துக்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

"ஒரு காட்சியைக் கூட தவறவிடாமல் பார்த்தால்தான் படத்தில் ஒளிந்துள்ள மர்மங்களை அறிந்துகொள்ள முடியும். இந்தப் படம் என் திரை வாழ்வில் முக்கியமானதாக இருக்கும்," என்கிறார் யாஷிகா ஆனந்த்.

 சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டான்' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 'ஜலபுல ஜங்கு' என்று தொடங்கும் இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலசரவணன், இயக்குநர் கௌதம் மேனன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 இந்தி நடிகை கத்ரினா கைஃபுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருமணப் பரிசுகள் குவிந்துள்ளன. நடிகர் சல்மான் கான் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை புது மணத் தம்பதிக்கு பரிசளித்துள் ளார். இதேபோல் நடிகர் ரன்பீர் சிங் ரூ.2.5 கோடி மதிப்புள்ள நெக்லஸ் ஒன்றை பரிசளித்துள்ளார் என்றும் மும்பை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 அதர்வா நடிக்கும் புதிய படத்துக்கு 'ட்ரிகர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதைப்படி, ஒரு துப்பாக்கியால் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுமாம். அதனால் இப்படி ஒரு தலைப்பைத் தேர்வு செய்ததாக இயக்குநர் கூறியுள்ளார்.

 நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.