தாய்மார்களை ஊக்கப்படுத்தும் விஜயலட்சுமியின் 'சர்வைவர்' வெற்றி

தாய்மார்களை ஊக்கப்படுத்தும் விஜயலட்சுமியின் 'சர்வைவர்' வெற்றி

2 mins read
795c8fb5-c5a2-4559-b148-34aa877b677d
கணவர், குழந்தையுடன் விஜயலட்சுமி. -
multi-img1 of 2

'காதல் கோட்டை' கட்டி சிறந்த இயக்­கு­ந­ருக்­கான இந்­திய அர­சின் தேசிய விருது பெற்­ற­வர் அகத்­தி­யன். அகத்­தின் அழகு முகத்­தில் தெரி­யும்போது, அகத்­தி­யன் திறமை அவ­ரது மக­ளி­டம் இருக்­காதா என்ன?

'சர்­வை­வர்' ரியா­லிட்டி நிகழ்­வில் பங்­கேற்று, தனது திற­மை­யா­லும் அதி­ர­டி­யா­லும் ரசிக உள்­ளங்­களை கவர்ந்­துள்­ளார் விஜ­ய­லட்­சுமி.

இறு­தி­வரை தன்­னம்­பிக்­கை­யுடன் செயல்­பட்டு, அந்­தப் போட்டி­யின் வெற்­றி­யா­ள­ராகத் தேர்­வாகி, ஒரு கோடி ரூபாய் பரி­சும் பெற்­றுள்­ளார்.

'சென்னை-28' திரைப்படம் மூலம் சினி­மா­வில் அறி­மு­க­மான விஜ­ய­லட்­சுமி தமிழ், கன்­ன­டம் உட்பட சுமார் 15 திரைப்படங்­களில் நடித்­தி­ருக்­கி­றார்.

மேலும், தன் கண­வர் ஃபெரோஸ் மொஹ­மத் இயக்­கத்­தில் கிருஷ்ணா நடித்த 'பண்­டிகை' படத்­தின் மூலம் தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் ஆனார்.

இந்­நி­லை­யில், தமி­ழில் புதிய முயற்­சி­யாக 'ஜீ தமிழ்' தொலைக்­காட்சி தயா­ரித்த 'சர்­வை­வர்' என்கிற அதி­ரடி நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­கும் வாய்ப்பு விஜ­ய­லட்­சு­மிக்கு கிடைத்­தது.

உயிர் வாழ்­வ­தற்­கான போராட்­டம் என்­ப­து­தான் இந்த நிகழ்வு வெளிப்­ப­டுத்­தும் கருத்து.

ஆப்­பி­ரிக்­கா­வின் அடர்ந்த தீவுப் பகுதி ஒன்­றில் விக்­ராந்த், நந்தா, உமா­பதி, விஜ­ய­லட்­சுமி உள்­ளிட்ட 18 போட்­டி­யா­ளர்­கள் 'காடர்­கள்', 'வேடர்­கள்' என இரு குழுக்­க­ளாக கள­மி­றக்­கப்­பட்­ட­னர். இந்த நிகழ்ச்­சியை நடி­கர் அர்­ஜுன் தொகுத்து வழங்­கி­னார்.

காட்­டுக்­குள் கிடைப்­ப­தைக் கொண்டு தங்­கள் தேவையை நிறை­வேற்­றிக்கொள்ள வேண்­டும் என்பது விதி.

இதில் எதிர்­பா­ராத பல சாக­சங்­க­ளை­யும் நிறை­வேற்ற வேண்டி­ இ­ருக்­கும். எதிர்­பா­ராத சிக்­கல்­களை­யும் சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும். ஒவ்­வொரு போட்­டி­யின் முடி­வி­லும் ஒரு­வர் வெளி­யேற்­றப்­பட்டு, 90 நாள்­கள் பர­ப­ரப்பாக இந்த நிகழ்ச்சி நடந்து வந்­தது.

இறு­திக்­கட்­டத்­தில் விஜ­ய­லட்­சுமி, நாரா­ய­ணன், வானசா, உமா­பதி, சரண் ஆகி­யோர் களத்தில் தாக்குப் பிடித்தனர். உச்­ச­கட்­டத்­தில் விஜ­ய­லட்­சு­மிக்­கும் சரணுக்­கும் இடை­யே­தான் கடும் போட்டி. எழு­பது நிமி­டங்­கள் நீடித்த இறு­திப் போட்­டி­யில் வெற்­றி­வாகை சூடி­னார் விஜ­ய­லட்­சுமி என அர்ஜுன் அறி­வித்­தார்.

"திரு­ம­ண­மா­கி­விட்­டது, குழந்தை­யும் பிறந்­து­விட்­டது. இனி­மேல் செய்­வ­தற்கு ஒன்­றும் இல்லை," என்று சலிப்­ப­டை­யும் இளம் தாய்­மார்­க­ளுக்கு தன்­னம்­பிக்கை ஊட்டு­வ­தாக இருக்­கிறது விஜ­ய­லட்­சு­மி­யின் வெற்றி.

ஒரு ­கு­ழந்­தைக்கு தாயான பின்பு­தான் மிகுந்த தைரியசாலியாக மாறியதாகச் சொல்லி, இளம் தாய் மார்­களை ஊக்­கப்­படுத்­தி­ உள்ளார் விஜ­ய­லட்­சுமி.

போட்­டி­யில் வெற்றி பெற்று, சிங்கப் பெண்­ணாக வீடு திரும்­பிய விஜ­ய­லட்­சுமி தன் எண்­ணங்­களை பதி­விட்­டுள்­ளார்.

"அனை­வ­ரின் அன்­பிற்­கும் சக போட்­டி­யா­ளர்­களுக்கும் நன்றி. முதல் நாளில் இருந்தே நாங்­கள் அனை­வ­ரும் கடு­மை­யாகப் போராடி­னோம். உங்­க­ளி­டம் சொல்ல, பல கதாநாயகர்களின் கதை­கள் உள்ளன. விரை­வில் சொல்­வேன்," என்று விஜ­ய­லட்­சுமி கூறி­யுள்­ளார்.