சிங்கப்பூர் புதுமுகக் கலைஞர்களின் 'விழியோரம்'

சிங்கப்பூர் புதுமுகக் கலைஞர்களின் 'விழியோரம்'

1 mins read
7cf8bee8-de87-4866-b6f1-ecf32686627a
'விழியோரம்' படத்தின் சுவரொட்டி. -

சக்தி மேகனா

சிங்­கப்­பூர் தமிழ்க் கலை­ஞர்­கள் ஒன்­று­சேர்ந்து 'விழி­யோ­ரம்' எனும் படத்­தைத் தயா­ரித்­துள்­ள­னர்.

எதிர்­வ­ரும் 26ஆம் தேதி­யன்று மாலை 6 மணிக்கு கார்­னி­வல் சினி­மா­ஸில் முதல் காட்சி திரை­யி­டப்­பட இருக்­கிறது. அதையடுத்து பொது­மக்­கள் திரைப்­ப­டக் கலை­ஞர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டும் நிகழ்­வுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. குற்­றத் திகிலை மைய­மாக கொண்­டுள்­ளது இந்­தப் படம்.

"இப்­ப­டத்­தில் வேலை செய்த புது­மு­கங்­கள் அதிக ஈடு­பாட்­டு­டன், கடி­ன­மாக உழைத்­துள்­ள­னர். கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழல் ஏற்­ப­டுத்­திய முடக்­க­நி­லைக்­குப் பின் வெளி­வ­ரும் இந்­தப் படம் அனை­வ­ருக்­கும் ஒரு விருந்­தாக அமை­யும்," என்று திரைக்­க­தையை எழு­தி­யுள்ள திரு­மதி கீர்த்­தனா கூறி­னார்.

"சிங்­கப்­பூ­ரில் உள்ள திற­மை­யான புது கலை­ஞர்­களை வெளிக்­கொண்டு வரு­வ­து­தான் படத்­தின் முக்­கிய நோக்­கம். விழி­யோ­ரம் என்­பது ஒரு வலைத் தொடர். அந்த வலைத் தொடர்­களை பட­மாக்கி, சிங்­கப்­பூர் மக்­கள் பார்ப்­ப­தற்கு இந்த ஆண்டு முதல் காட்­சி­க­ளைத் திரை­யி­டு­கி­றோம்," என்­கி­றார் திரைப்­படத்­தின் இயக்­கு­நர், தயா­ரிப்­பா­ளர், ஒளிப்­ப­தி­வா­ளர், சுதந்­திர ஊட­கக் கலை­ஞ­ரு­மான திரு ரிஷி வர்­மன் கூறி­னார்.

'விழி­யோ­ரம்' முதல் காட்­சிக்­கான பார்ப்­ப­தற்கு டிக்­கெட்­டு­களை https://www.theshufflestudios.com/vizhiyoram-premiere-show எனும் இணை­யத் தளத்­தில் வாங்­க­லாம்.